Monday 7 May 2018

ஈர்ப்பு விதி

நம் ஆழ்மனதில் ஆழ்ந்த நம் எண்ணத்தை விதைத்தால் தவறாது செயலுக்கு வரும். நல்லதை விதைப்போம்              ஈர்ப்பு விதியை பொறுத்தவரை கால அளவுகள், விதிகள் போன்றவை எல்லாம் கிடையாது
.
நீங்கள் ஒரு விசயத்தை ஆழமாக நம்பி காட்சிபடுத்தினால் மட்டும் போதும், அதை உங்கள் முன் கொண்டு வரும்...
.
பிரான்ஸ் நாட்டில் ஒரு கிராமத்து கடைக்காரப் பெண்மணி ஒரு சிறுவனிடம்  ஒருநாள் ஒரு கேள்வியைக் கேட்டாள்..
.
“தம்பி, நீ படிச்சு என்ன வேலைக்குப் போகப் போற?” அதற்கு அந்த சிறுவன் உடனடியாக சொன்ன பதில்; “நான், பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாகப் போகிறேன்!”
.
பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சக்கரவர்த்தியாக முடியும். அதுதான் அன்றைய உலகின் நடைமுறை வழக்கம்.
.
அதை மீறுவது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே அந்தப் பெண்மணி கருதினாள்.
.
அந்த சிறுவன் தன்னுடைய மனதில் போர்க்களங்களை உருவாக்கிப் போரிடும் முறைகளைக் கற்பனையில் வடிவப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்தப் பயிற்சிதான் பின்னாளில் அந்த சிறுவனை எல்லாப் போர் முனைகளிலும் வெற்றி பெறச் செய்தது.
.
அந்த சிறுவன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம்.
.
மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அந்த சிறுவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை பிடிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம்.
.
திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வாராம் சிறுவன்
.
சிறுவனின் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் எல்லாம் பிறகு வரலாறாகியது .
.
பின்னாளில் சிறுவன் பிரான்ஸ் நாட்டின் வம்சாவழி வரலாற்றை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் உலக வரலாற்றின் திசைப்போக்கையும் முழுக்க முழுக்க மாற்றி அமைத்தார் அவர் தான் நெப்போலியன்            🌹 நன்றி வாழ்கவளமுடன்🌹