❣❣❣முன்னொரு காலத்தில் ஒரு பெண்
இருந்தாள். அவள் வளர்ந்து வந்த மதத்தை விட்டு அவள் விலகி வந்தாள். அவள் மற்றொரு
மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதில் சேர்ந்தாள்....
பின் மற்றொரு மதத்தின் கொள்கை
மீது பிடிப்பு ஏற்பட்டு இதை விட்டு விலகி அதில் சேர்ந்தாள்....
ஒவ்வொரு முறை அவள்
வேறு மதத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும்போதும் அவளுக்கு ஏதோ புரிந்து விட்டதாகவும்
ஆனால் அது நிறைவு தரவில்லை எனவும் அவள் நினைத்தாள்....
ஒவ்வொரு முறை அவள் மதம்
மாறும்போதும் அவள் வரவேற்கப்பட்டாள். அவளது தரம் உயர்ந்து இருப்பதாகவும், அவளது
தூய்மையும் ஞானநிலையும் உயர்ந்து வருவதாகவும் எல்லோரும் நினைத்தனர்....
ஆனால் அவளது மனநிலையோ
குழப்பமாகத்தான் இருந்தது. இந்த நீண்ட பயணத்தில் அவள் ஒருமுறை இமாம் ஜபார் சாதிக்
என்ற நிறைவடைந்த ஞானி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றாள்....
அவளது முயற்சிகளையும்
கருத்துக்களையும் கேள்விப்பட்ட பின் அவர் நீ உன் வீட்டிற்கு திரும்பிச் செல். நான்
எனது முடிவை ஒரு செய்தியாக அனுப்பி வைக்கிறேன் என்றார்....
விரைவிலேயே அந்த ஞானியின் சீடர்
ஒருவர் இவளின் வீடு தேடி வந்தார். அவர் கையில் அந்த குரு கொடுத்தனுப்பிய ஒரு
பார்சல் இருந்தது....
அவள் அதை திறந்து பார்த்தாள். அதில் ஒரு கண்ணாடி பாட்டில்
இருந்தது. அதில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களையுடைய மணல் மூன்று அடுக்குகளாக
நிரப்பப்பட்டு இருந்தது. மீதி பாதி பஞ்சால் நிறைக்கப்பட்டிருந்தது....
அதன்கூடவே இந்த
பஞ்சை எடுத்துவிட்டு இந்த பாட்டிலை குலுக்கு. அது எப்படி இருக்கிறதோ அப்படித்தான்
நீ இருக்கிறாய் என்ற எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் இருந்தது.
அவள் அந்த பஞ்சை எடுத்துவிட்டு
அந்த பாட்டிலை குலுக்கினாள்....
பார்த்தபோது அவள் கையில் இருந்தது சாம்பல் கலர் கொண்ட
மணல் பாட்டில்.--ஓஷோ ❣❣❣❣❣ the