Thursday, 24 May 2018

வளர்ச்சி

உங்கள் தேவைகள்,உங்கள் விருப்பத்திற்கு நிறைவேற  வேண்டும் எனில் அது சாத்தியம் ஆகுமா?
உங்கள் உழைப்பு எந்த வித வளர்ச்சியையும் உங்களுக்கு தர வில்லையா?
நீங்கள் தோல்வி மட்டுமே சந்தித்து வருபவரா?
உங்கள் மனம் எப்போதும் இறுக்கமான சூழல் கொண்டதாக உள்ளதா?
                 இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் உங்கள் மனம் ஒரு நிலைபடுத்தி நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரம்ப செய்வதே.
1). உங்கள் தேவைகளை உங்கள் விருப்பத்திற்கு நிறைவேற்றி கொள்ள முடியும். அந்த விருப்பத்தின் மீது அதீத பற்று வைத்து அது நிறைவுபெற்றது போன்ற மனநிலையை கொண்டு வாருங்கள். நிச்சயம் நீங்க எதிர்பார் விட சிறப்பாக அது நடந்து முடியும்.
2). உழைப்பு மிக முக்கியம், ஆனா அதில் சோர்வு வரவே கூடாது,ஈடுபாடு மிக முக்கியம் அதோடு எந்த தொழிலாக இருந்தாலும் அதன் மேல் ஒரு காதல் கொள்ளுங்கள் வாரி வழங்கி உங்களை திக்குமுக்காட செய்திடும். ஒரு வியாபரத்தை காலையில் தொடங்கும் போது இன்று நமக்கு நல்ல ஒரு வருமானம் ஈட்டியது போன்ற உணர்வோடு தொடங்குங்கள். இன்று எப்படி இருக்குமோ, விக்குமோ, விக்காதோ இது போன்ற எதிர்மறை மனதில் என்றுமே வர கூடாது.
3). தோல்வியே சந்தித்து வர காரணமே மனசு தான்.முடியுமா,முடியாதா,நடக்குமா,வருமா, கிடைக்குமா,இதுபோன்ற சந்தேகமான எண்ணம் கொள்ளாதீர்கள்.தோல்வியே வந்தாலும் வெற்றி பெறுவோம் என்ற ஒற்றை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். கண்டிப்பாக பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.
4) மனம் இறுக்காம கொண்டவர்கள்  தங்கள் தினசரி வாழ்க்கை சூழலில் இருந்து சற்று மாறி உங்கள் மனம் விரும்பும் சூழலுக்கு கொஞ்சம் மாறி பாருங்கள்.ஆழ்மனது சில விருப்பங்களை சொல்லும் போது உங்கள் மனது அதை ஏற்று கொள்ள மறுக்கும்.இதை நீங்கள் ஆழ்மனதின் விருப்பத்திற்கு மாறினால் மனம் தானாகவே புத்துணர்ச்சி பெற்று ஆனந்தமான சூழலில் உங்களை வைத்து கொள்ளும்.
மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்