.............................................
''வெற்றியும், தோல்வியும்..''..
.............................................
உங்களின் தோல்வியை இரட்டிப்பு ஆக்குங்கள். நீங்கள் தோல்வியை வெற்றியின் பகைவனாக பார்க்கிறீர்கள்,
ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் தோல்வியால் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
அதனால் தைரியமாக தவறுகள் செய்யுங்கள், என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள்!
அதிலிருந்து தான் நீங்கள் வெற்றியை கண்டெடுக்க முடியும்.”
வெற்றி, தோல்வியின் மறுமுனையில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஒரு தோல்வியில் இருந்து நீங்கள் மனம் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
அது உங்களின் விருப்பம். வெற்றி; பேர், புகழ், செல்வம் மற்றும் மரியாதையை பெற்றுத்தரும்,
ஆனால் தோல்வியை அரவணைத்து செல்வோரும் தங்களின் இலக்கை நோக்கி எந்த ஒரு சலனமும் இன்று பயணிப்பர்.
நீங்கள் மதித்து போற்றும் பிரபலங்கள் பற்றி யோசித்து பாருங்கள்...
அவர்கள் அனைவர் வாழ்க்கையும் தோல்விகள், கசப்பான அனுபவங்கள், ஏமாற்றங்கள், இறக்கங்கள் நிறைந்தே இருக்கும்.
இருப்பினும் அவர்கள் வெற்றியின் உயரத்தை அடைந்திருப்பர். எது அவர்களை வெற்றி வரை இட்டுச்சென்றது?
பதில் இதோ...
பொறுமை, விடாமுயற்சி, திறமை, மீண்டெழுதல், என்று ஒவ்வொரு முறை அவர்கள் கீழே விழும்போதும் கடைப்பிடித்ததால் கிடைத்த வெற்றி.
தோல்வியை கண்டு புலம்பாதீர்கள் ..
……………………………………………
நீங்கள் முன்னேறி செல்ல நினைத்தால் முதலில் தோல்வியுற்றவற்றில் இருந்து நகர்ந்து செல்லுங்கள்.
ஆம்.,நண்பர்களே.,
நேர்மறையாக சிந்தியுங்கள்.
“நான் சாத்தியமாகக் கூடிய வழியை தேடிக்கொண்டு இருக்கிறேன்”, ”என்னால் முடியும், என்னால் நிச்சயம் முடியும்”, “
கடந்தகால தோல்வியில் இருந்து நான் கற்றுக் கொண்டு சரியான திட்டத்தை வகுக்கிறேன்,”
என்பன போன்ற ஊக்கம் தரும் வாக்கியங்களை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
இது உங்களின் வருங்கால செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும்..🌹