💢காலிப்படகு 💢
🌟ஜென் துறவி லீன்சீ படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர்.
அவரிடம் ஒரு படகு இருந்தது.
அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார்.
சில வேளைகளில் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.
ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.
தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.
யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார்.
பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது.
"என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை.
மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன்.
அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன், இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.
அனைத்தும் அதன்அதன் சுயத்திலிருந்தே இயங்குகின்றன.
ஆழமாக பார்த்தால் யாரும் எதிரிகள் அல்ல.
குருலீன்சீ கூறியது போல் காலிப்படகுகள் தான்.🌟