Tuesday 2 August 2016

பக்தி

பக்திக்கு என்ன தேவை?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது,
மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன்.

அர்ஜுனனும் ஆம் என்றான்.
இல்லையில்லை....
கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.

ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.

மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும்,
அதிலென்ன சந்தேகம், அது கிளி தான்,
கிளிதான்,
கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான்அர்ஜுனன்.

என்னடா நீ!
நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!
அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்ற கண்ணனிடம்,

கண்ணா! என்பார்வையை விட உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை அதிகம்.
மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால்,
அதை கிளியாகவோ,
கழுகாகவோ
மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்!

நீயே எல்லாம் என்றான பிறகு,
எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...!உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

பக்திக்கு தேவை நம்பிக்கை தான்!