Monday 29 August 2016

கோபம்

கோபம் வந்தால் வெற்று படகாய் மாறு

நீ படகில் சென்று கொண்டிருக்கிறாய்.

எதிரே மற்றொரு படகில் வந்து மோதும் போது அவர் மேல் கோபப்படுகிறாய்.

ஏனெனில் கோபம் கொள்ள ஒரு நபர் இருக்கிறார்.

அதுவே ஒரு காலியான படகு மோதும் போது
சூழ்நிலையை சரிசெய்கிறாய்.

அதன்மீது கோபப்பட மாட்டாய்.

ஏனெனில் அங்கே கோபம் கொள்ள நபர் யாரும் இல்லை.

வெறுமையே உள்ளது.

நீ வெறுமையாக இருக்கும்போது
உன்மேல் யாராலும் கோபப்பட முடியாது.

அது உன்னையும் தாக்காது.

வெற்றுப்படகாய் மாறிவிடு

~ ஓஷோ ~