Saturday 6 August 2016

நேரத்தை வீணடிக்காதே.

உம்மன் என்ற குருவிடம் ஒரு துறவி கேட்டார் :

"சுவாமி, எல்லா வழிகளிலும் பௌத்தம் உதவுவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், குருடர், செவிடர், ஊமைக்கு அது எப்படி உதவும்?

குருடரால் ஆசிரியரைப் பார்க்க முடியாது. செவிடரால் ஆசிரியர் சொல்வதைக் கேட்க முடியாது.ஊமையால் ஆசிரியரிடம் கேள்வி கேட்க முடியாது. இவர்கள் எவ்வாறு ஞானம் பெற முடியும்?"

சற்று நேரம் குரு மௌனமாக இருந்தார். பிறகு சட்டென, துறவியைத் தன் கைத்தடியால் அடித்தார்.

துறவி, பயந்து பின்னால் பாய்ந்தார். அதைக் கண்ட குரு, "ஆஹா நீ செவிடனில்லை" என்றார். பிறகு,"இதெல்லாம் உனக்குப் புரிகிறதா?" என்று கேட்டார்.

"புரியவில்லை சுவாமி"என்றார் துறவி.

"ஆஹா ஊமையல்ல"என்றார் உம்மன்.

மற்றவர்களைப் பற்றி நினைக்காதே.

நேரத்தை வீணடிக்காதே.

மனம், தன்னிலிருந்து தப்பித்துக் கொள்ளவே தந்திரமாய் முயல்கிறது.

--ஓஷோ--