Tuesday 30 August 2016

உங்களிடம் என்ன இருக்கு

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எழுப்பப்பட்டது.

ஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய 
குப்பைகளை கொண்டுவந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா..?

ஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர். அதன் மேல், *தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்* என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்..

உண்மைதானே .. உங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..

என் இனிய நண்பனே, உன்னிடம் என்ன உள்ளது ?

*அன்பா , வெறுப்பா, பிறருக்கு நீ எதை தரப்போகிறாய், வன்முறையா, அமைதியா, மரணத்தையா அல்லது நிம்மதியான வாழ்வையா*

உன் இத்தனை ஆண்டு வாழ்க்கையில் எதை நீ பெற்றாய்..?

ஆக்கும் சக்தியையா, அழிக்கும் தன்மையையா ?
பணத்தை சம்பாதிக்கும் வித்தையையா , அல்லது கொள்ளையடிக்கும் தந்திரத்தையா..?

நல்லவைகளை கண்டறியும் நல்லறிவையா, தீயவைகளை தரும் தொழில்நுட்பமா..

தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் மனிதன்..
உங்களிடம் என்ன இருக்கு.. எதை தரப்போகிறீர்கள்..
*#சிந்தியுங்கள்..*