Sunday, 2 April 2017

வாழ்க்கையே பிரம்மாண்டமானது..

வாழ்க்கையே பிரம்மாண்டமானது..
ஒரு நாள் புத்தர் நடந்து செல்லும் பாதையில் ஒரு மனிதர் வந்து புத்தரை ஓங்கி கன்னத்தில் அடித்தார்.. புத்தர் அதை வாங்கிகொண்டு புன்னகையுடன் அங்கிருந்து நகன்றார்..
தொடர்ந்து வந்த சிஷ்யர்கள் அவரிடம் மெல்ல கேட்டார்கள்.. அவருக்கு அப்படி என்ன கோபம் உங்கள் மீது என கேட்டனர்..
புத்தர் அதற்கு அவனிடம் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதன் வெளிபாடு தான் இந்த கோபம்.. என்னிடம் தீர்வு மட்டுமே உள்ளது அதுதான் என்னுடைய புன்னகை.. ஒரு நாள் அவனிடம் நாமே சென்று கேட்போம் என கூறினார்..
ஒரு சில மாதங்கள் சென்று அவன் இருக்கும் இடத்தை நெருங்கினார்.. சிஷ்யர்கள் மூலம் அவன் அழைத்து வரபட்டான்..
புத்தர் அவனிடம் உனக்கு நிறையா கேள்விகள் உள்ளத்தில் இருக்கிறது என்னிடம் நீ கேள் என கூறினார்..
எனக்கு வாழ்க்கையே உபயோகமில்லாமல் இருக்கிறது அதுதான் என் பிரச்சனை இதற்கு தீர்வு இருகிறதா என கேட்டார்.
புத்தர் அதற்கு சிறித்து கொண்டே நான் இதற்கு பதில் குடுக்கும் முன் நீ இந்த உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று உபயோகமில்லாத ஒரே ஒரு பொருளை எடுத்து வா நான் சொல்கிறேன் பதிலை..
அவரும் குடுத்த பணியை நிறைவேற்ற 6 வருடங்கள் எடுத்து கொண்டு மீண்டும் புத்தரை சந்திக்க வந்தார்..
புத்தர் என்ன கொண்டு வந்தீங்க நு கேட்டார்.. அதற்கு அவர் கண் கலங்கி நின்றார். உடனே புத்தர் சரி உபயோகமுள்ள ஒரு பொருளை கொண்டு வாருங்கள் என மீண்டும் கூறினார்..
அவர் அருகில் இருந்த வைக்கோலை நீட்டினார். உடனே புத்தர் இது போதும் சான்று நீங்கள் பக்குவம் அடைந்ததற்கு.
..
நீதி : இந்த உலகில் அனைத்துமே உபயோகமானதுதான் நம் மனம் மட்டும் தான் உபயோகமில்லாமல் அசுத்தமாக சிந்திகிறது.