Monday, 3 April 2017

நன்றியுணர்வு

எண்ணங்களின்_சக்தி
நன்றியுணர்வு
ஒரு செயலை தொடர்ந்து 21 முறைக்கும் மேல் செய்தோம் என்றால் அந்த செயல் நம்முடைய பழக்கவழக்கமாக மாறி விடுகிறது.
நம்முடைய பழக்கவழக்கங்கள் இடம், பொருள் மற்றும் ஏவல் என்று எதையும் பார்க்காமல் அது தானாகவே செயல்பட ஆரம்பித்துவிடும்.
நம் ஆழ்மனதில் ஒரு அற்புதமான செயலை நமது பழக்கவழக்கங்களில்(HABIT) ஒன்றாக மாற்றிவிடுகிறது. அது தான் நன்றியுணர்வு.
நன்றியுணர்வு எனும் உணர்வு நம்முள் சென்றுவிட்டால் அது நமக்கு தரும் பலன்கள் அளவிடமுடியாதது. நமது எண்ணங்கள் யாவும் நிறைவேற
வேண்டுமெனில் நம்மில் நன்றியுணர்வு அதிகமாக இருந்தாலே போதும்.
அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் பல அதில் சிலவற்றை மட்டும் படமாக கொடுத்துள்ளோம்.
நீங்கள் இன்று எத்தனை பேருக்கு நன்றி( # THANK_U )சொல்லியுள்ளீர்
கள்.அல்லது எத்தனை பேர் உங்களுக்கு இன்று நன்றி சொல்லியுள்ளார்கள் என்பதை பொறுத்தே
நமது எண்ணங்கள் செயலாக மாற வாய்ப்புள்ளது.
நன்றியுணர்வு அதிகம் உள்ளவர்கள் பலர் மிக பிரம்மாண்டமான சாதனைகளை செய்துள்ளார்கள். அவர்களில் நமது மகாத்மா காந்தியும் ஒருவர்.
.
நாம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல ஒரு சிறிய முயற்சியினை ஆரம்பிப்போம்…
. என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.
என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.
எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.
எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.
எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.
எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.
எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.
தினமும் நமக்கு 86,400 நொடிகள் பரிசாக கிடைத்துள்ளது, இதில் ஒரு நொடியை எதற்காவது “நன்றி (thank you)” சொல்ல செலவிடலாமே…
நன்றியுணர்வு அனைத்தையும் மாற்றவல்லது