நமது பிரதிபலிப்பே இந்த உலகம்
உலகப் புகழ் பெற்ற கதை சொல்பவரான ஈசாப் ஏதென்ஸ் நகரத்தின் அருகேயுள்ள ஒரு சாலையோரத்தில் ஒருநாள் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன் அவனிடம் வந்து "ஏதென்ஸ் நகரத்தில் உள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு ஈசாப்" ஐயா! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்.அங்கே எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்? என்று கேட்டார் .
அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அந்த வழிப்போக்கன் " நான் அர்க்கொசிலிருந்து வருகிறேன் , அங்குள்ள மக்கள் பொய்யர்கள், திருடர்கள், இயற்கையிலேயே சண்டைக் குணம் மிகுந்தவர்கள்" என்று எரிச்சலுடன் சொன்னான்.
"இதைச் சொல்வதற்கு நான் வருந்துகிறேன். ஏதென்ஸ் மக்களும் ஏறக்குறைய அப்படிப்பட்டவர்கள்தான்" என்று ஈசாப் சொன்னார்.
சற்று நேரத்திற்குப்பின் , மீண்டுமொரு வழிப்போக்கன் ஈசாப்பிடம் வந்து அதே கேள்வியை கேட்டான். ஈசாப்பும் அவன் எங்கிருந்து வருகிறான் அங்குள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள் போன்ற அதே கேள்வியை அவனிடம் திருப்பிக்கேட்ட
ார் . அதைக்கேட்டு அந்த மனிதனின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது.
"நான் அர்க்கொசிலிருந்து வருகிறேன் , அங்குள்ளவர்கள் கருணை மிகுந்தவர்கள் , தோழமையும் , சிந்தனைத்திறனும் கொண்டவர்கள். அவர்களைப் பிரிந்து வந்ததற்காக வருந்துகிறேன்..." வழிப்போக்கன் கண்களில் நீர் கசிய சொன்னான்..
அதற்கு ஈசாப் " எனதருமை நண்பனே! உன்னிடம் சொல்வதற்கே சந்தோசமாக இருக்கிறது.ஏதென்ஸ் மக்களும் அவர்களைப் போன்றவர்கள்தான்." என்று சந்தோசமாக சொன்னார் .
இரண்டு வழிப்போக்கர்கலுமே ஒரே ஊரைச்செர்ந்தவர்கள்தான் ஆனாலும் தங்கள் ஊரைப்பற்றிய பார்வைகள் வேறாக இருந்தன
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.