Sunday, 23 April 2017

உன்னுள் நுழைய தியானம்

♥ எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்

ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்

நீ ஆச்சரியமாக இருக்கும் போது

உன் மனதில் எண்ணம் புகுந்தால்

நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது

நீ ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை

என்பதால் கேள்விகள் கேட்கிறாய்

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர்தான் கடவுள்

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு

ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை

அற்புதம் என்பது பெருங் கடல்

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது

அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது

அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்

அதனுடனேயே தங்கி விடு

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்

யோசிக்க ஆசை வரும்

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய் ♥

💚 ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள் II 💚