Sunday, 16 April 2017

தெய்வீகம்

🌸 நீ பொருளுலகத்தில் இருந்தால்

"உணர்வுகளில் தேடு,

கடவுள் அங்கே இருக்கிறார்" என நான் கூறுவேன்

நீ உணர்வுகளில் இருந்தால்.....

"இப்போது கடந்து செல்,

உணர்வுகளில் கடவுள் இல்லை,

கடவுள் கடந்தவர்" என நான் கூறுவேன்

படிப்படியாக ஒருவர் விலக்கிக் கொண்டே செல்ல வேண்டும்.

எப்போது ஒரு பொருளும் இல்லையோ

எந்த உணர்வும் இல்லையோ....

அங்கே கடவுள் இருக்கிறது

எப்போது எங்கே எந்த பொருளும், எண்ணமும் இல்லையோ........

எப்போது அங்கே இந்த உலகமும் அந்த உலகமும் இல்லையோ........

எப்போது அங்கே எந்த விஷயமும் இல்லை மனமும் இல்லையோ..........

அங்கே கடவுள் இருக்கிறது

கடவுள் விஷயமல்ல,

மனமுமல்ல,

கடவுளில் இரண்டும் இருக்கிறது.

கடவுள் ஒரு பயங்கரமான புதிர்

சுத்தமாக தர்க்கமற்றது

தர்க்கத்தை கடந்தது

நீ மரத்திலோ,
கல்லிலோ,
கடவுளின் உருவத்தை உருவாக்க இயலாது

மற்றும் உன்னுடைய கருத்துக்களிலும், சிந்தனைகளிலும் கடவுளின் உருவத்தை உருவாக்க இயலாது

நீ எல்லா உருவங்களையும் உடைத்து விடும் பொழுது - நீ எப்பொழுது எல்லாவற்றையும் முடிக்கிறாயோ - உள்ளே / வெளியே / ஆண் / பெண் / வாழ்வு / இறப்பு - எல்லா இரண்டானவற்றையும் முடிக்கிறாயோ.........

பிறகு எது எஞ்சியுள்ளதோ அதுவே தெய்வீகம் 🌸

🌷ஓஷோ 🌷