Monday, 18 July 2016

மனம் பற்றிய புரிதல் பகிர்வு*

*மனம் பற்றிய புரிதல் பகிர்வு*

🌷மனிதனுக்கு இறைவனால் வழங்கப் பட்டுள்ள மாபெரும் சக்தியே மனம்.....!!!

🌷ஏனெனில் மனிதனால் மட்டுமே தனது சிந்தனை ஆற்றலின் துணை கொண்டு மெய்ப் பொருள் எது என்று ஆராய்ந்தறிந்து, உணர்ந்து உய்ய முடியும்....!!!

🌷எல்லாவற்றிற்கும் மூலமான இறைநிலை எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், மனதின் மூலமாக மட்டுமே அதனை உணர முடியும்....!!!

🌷மனமே இறைவனை அறிய உதவும் கருவி......!!!

🌷மனதின் மறுபக்கம் இறைவன்......!!!

🌷மனதை அறிந்து அதன் செயல்பாட்டைச் சீரமைத்தால் வாழும் காலத்தில் செயற்கரிய பல செயல்களை நம்மால் ஆற்ற முடியும்......!!!

🌷மனதை அறிந்து நமது கட்டுப் பாட்டில் கொண்டு வந்து பழக்கிவிட்டால், அங்கு குழப்பமே வராது. அமைதியான தெளிவான மனதில் தான் மெய்ப்பொருள் பற்றிய சிந்தனைகள் உதிக்கும் ......!!!

🌷எவ்வாறு தெளிந்த நீரோடையில் அதன் ஆழத்தை நம்மால் காண முடிகிறதோ அது  போன்று, மனம் தெளிவாக உள்ள போதே ஆழ் மனதில் இருக்கக் கூடிய இறைநிலையைக் காண முடிகிறது.....!!!

🌷குழம்பிய குட்டை ( எண்ணக் குவியல்கள் மற்றும்க உணர்ச்சி நிலை) போன்று மனதை வைத்திருந்தால், அங்கு எப்போதும் குழப்பமே மிஞ்சும்........!!!
அதுவே உள்ளிருக்கும் தெய்வத்தை பார்க்க  விடாமல் மறைத்துக் கொண்டிருக்கும் திரை (களங்கங்கள்).......!!!

🌷தவம் செய்து வர வர எண்ணங்களின் எண்ணிக்கை குறைவதாலும், அகத்தாய்வு செய்து தேவையற்ற எண்ணங்களைக் (நாம் மனம் கொண்டு உருவாக்கியவை)  குறைத்து விடுவதாலும், ஏற்கனவே நம்முள்ளே இருக்கக் கூடிய இறைநிலையின் பண்புகளான அன்பும் கருணையும் வெளிப்படுகின்றன.....!!!

🌷இறைவனின் இத்தகைய பண்புகளினால் எந்த செயல் செய்தாலும் விழிப்புணர்வோடு, மன விரிவு  கொண்டு ஆற்ற முடிகிறது.....!!!

🌷இத்தகைய மனவிரிவைக் கொண்டு செய்யும் செயல்களினால் மேலும் நமக்குள்ளே உள்ள இறை ஆற்றல் மலர்ந்து கொண்டே இருப்பதனை உணர முடிகிறது....!!!

🌷இவை அனைத்திற்கும் உதவுவது மனம் தான். இறைத் தேடலில் மனமிருந்தால் அதற்கான மார்க்கம் உண்டு. நமது தேடலுக்கு ஏற்ப சூழல்களையும் இந்த இயற்கையே நமக்கு அமைத்துக் கொடுக்கும்.
நமது பக்குவத்திற்கேற்ற குருவும் வருவார்.......!!!

🌷விந்தை என்னவென்றால் கிடைத்த மார்க்கத்தில் சென்று ஆழ் மனதிலுள்ள மெய்ப்பொருளை உணரும் போது, அதற்கு உதவிய மனம் இல்லாமல் போய்விடுகிறது.
இறைவனின் படைப்பில் தான் எத்தனை கோடி அற்புதங்கள்.......!!!

🌷பேரின்பத்தில், இன்ப ஊற்றில் மிதக்க விட்டாய் இறைவா.....!!!
மனம் கொண்டு இத்தகைய மானிடப் பிறவி எடுத்ததற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் எங்கள் இறைவா.....!!!

🌷தியானம், யோகம் என இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுவதற்கே முற்பிறவியில் (முன்னோர்கள்) ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதற்காக என்றென்றும் எனது முன்னோர்களை வணங்க்க் கடமைப் பட்டிருக்கிறேன்.......!!!

நன்றி
வாழ்க வளமுடன்