$$ஒரு நல்ல நாளுக்கான முத்தான பத்து விதிகள்$$.
# இன்று நான் திரும்பி எதிர்வினை செய்ய மாட்டேன்
யாரவது ஒருவர் முரட்டுத்தனமாகவோ ,பொறுமை இல்லாமலோ , இரக்கமற்றோ இருந்தால் அதேபோல் நான் இருக்க மாட்டேன்..
# இன்று எனது எதிரியை ஆசிர்வாதிக்க கடவுளிடம் வேண்டுவேன்
யாராவது என்னை கடுமையாக அல்லது நல்லவிதமில்லாமல் நடத்துபவர்களை அணுக நேர்ந்தால் , நான் அமைதியாக கடவுளிடம் அவரை ஆசிர்வாதிக்குமாறு வேண்டிக்கொள்வேன் ..ஏனென்றால் எதிரி என்று நான் புரிந்துகொண்ட அவர் எனது குடும்ப உறுப்பினராகவோ, பக்கத்து வீட்டுகாரராகவோ , கூடவேலை பார்ப்பவராகவோ அல்லது ஒரு புதியவாராகவோ கூட இருக்கலாம்.
# இன்று நான் கூறும் வார்த்தைகளில் கவனமாக இருப்பேன்.
எனது வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக பேசுவேன். தேவையற்ற கிசுகிசுக்களை பேச மாட்டேன்.
# இன்று ஒரு படி மேலே போவேன்..
அடுத்த ஒரு நபரின் சுமையை குறைப்பதில் / பங்கெடுப்பதில் உதவுவதற்கான பாதையை கண்டுபிடிப்பேன்.
# இன்று நான் மன்னிப்பேன்.
எனது வழிகளில் வரும் ஏதாவது காயங்களையும் வடுக்களையும் அதன் காரணிகளையும் நான் மன்னிப்பேன்.
# இன்று நான் யாராவது ஒருத்தருக்கு ஏதாவது ஒரு நல்லது பண்ணுவேன் ..ஆனால் அதை இரகசியமாக செய்வேன்.
நானாகவே சென்று யாரவது ஒருத்தரின் வாழ்வில் ஆசிர்வாதிப்பென்.உதவி செய்வேன்.
# இன்று நான் "மற்றவர்கள் என்னை எப்படி நடத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ" அதே போல் நான் நடத்துவேன்.
“என்னை எப்படி நடத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ அதேபோல் அடுத்தவர்களை நான் நடத்த வேண்டும் “ என்ற தங்க விதியை நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் கடைபிடிப்பேன்.
# இன்று நான் யாரை பலவீனப்படுத்தினேனோ அவரை மிகவும் ஊக்கபடுத்துவேன்.
என்னுடைய புன்னகை, வார்த்தைகள், ஆதரவான வெளிப்பாடுகள் மூலமாக வாழ்வில் போராடும் ஒருத்தரிடம் ஒரு வித்தியாசத்தை கொண்டுவரும்.
# இன்று எனது உடலை நன்றாக பேணுவேன்
நான் குறைவாக சாப்பிடுவேன், நான் ஆரோக்கியமான உணவையே சாப்பிடுவேன் , எனது உடலிர்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லுவேன்.
# இன்று எனது ஆன்மீகத்தன்மையை வளர்த்துவேன்.
இன்று எனது பிரார்த்தனையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிப்பேன். ஆன்மீக மற்றும் ஊக்கமளிக்கும் புத்தகங்களை படிக்க ஆரம்பிப்பேன். நான் ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து கடவுளின் வார்த்தைகளை கேட்பேன்...
இந்த எளிய வழிமுறைகளை என்றென்றும் இன்பற்றினால் எல்லாநாட்களுமே இனிய நாட்கள்தான்..
நன்றி.நன்றி..நன்றி...