ஐம்புலன்களை அடக்கு.
மனதை அடக்கு.
அப்போதுதான் யோகம் சித்திக்கும்.
*இது உண்மையா?*
நிச்சயமாக இல்லை.
நாக்கு,மூக்கு,கண்,தோல்,காது
இந்த ஐந்தும் "தனிச் சுதந்திரம்" தன்னில் கொண்ட உறுப்புகள்.
"மனமும் அப்படியே".
இவைகளை நாம் வேலைக்கு அமர்த்தியிருக்கறோம்.
இவைகள் வேலை செவ்வனே செய்தால்தான்
நம் பொழைப்பு உருப்படும்.
நாம் நமது வேலை ஆட்களுக்கு, ஒழுங்காக 'சமபளம், போனஸ், வேளாவேளைக்கு காபி..டீ, வருஷத்துக்கு ஒரு டூர்...இப்படியெல்லாம் கொடுத்தால்தான், நாம் சொல்லும் வேலை ஒழுங்காக நடக்கும்.
அதே போல
கண்ணுக்கு, வெறும் பைலையோ, கணக்கு லெட்ஜரையோ, இப்படியாக அவரவர் வேலையை மாத்திரம் செய்யச்சொன்னால், கண் களைப்புற்று, நம்மை தலைவலிக்கு,தலைசுற்றலுக்கு, மற்றும் "வல்"லென்ற கோபத்திற்கும் அளாக்கிவிடும்.
கண்ணுக்கென்று "தனி அபிலாசைகள்" உண்டு.
குளுமையான இயற்கை காட்சிகள், பொழுது போக டிவி,
அழகிய பெண்களை பார்த்து ரசித்து,
அவாவுறுதல்,
இந்த மாதிரி ஆசைகள் "கண்ணுக்கு மாத்திரம் சொந்தமானது".
நமக்கல்ல.
அதே போன்று 'காதும்'
நல்ல இசை, பாடல்கள், வாழ்த்துக்கள்,
போன்றவைகளை கேட்க விரும்பும்.
வழக்கமாக வணக்கம் சொல்லும் தெரிந்தவர்கள், இன்று சொல்லவில்லையென்றால்,
காது ரெம்ப வருத்தப்படும்.
திடீரென்ற "டமார்" ஓசைகள் காதுக்கு பிடிக்காது. அப்படி கேட்டவுன் நம்மை டென்ஷனாக்கிவிடும்.
பி.சுசீலாவின் பாடல்களை எம்.எஸ்.வி. இசையில் கேட்டவுடன்,
நமக்கு ஞானத்தின் கதவுகளை,காது தானே திறந்துவிடும்.
மூக்கும் அப்படித்தான்,
அருவெறுப்பான வாசனையை நுகரும்போது நம்மை கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாககிவிடும்.
நறுமணத்தை நுகரும்போது, நமக்கு ஞான வாசலை திறந்துவிடும்.
ஒரு ஐந்துநாள், மூன்று வேளையும் தயிர்சாதம் சாப்பிட்டுப் பாருங்கள்.
நாக்கு, ஸ்டிரைக் பண்ண ஆரம்பித்துவிடும். என்னதான் நீங்கள் உங்கள் சூழ்நிலையை எடுத்துக் கூறினாலும்,
நாக்கு அடங்காது.
அதற்கு நீங்கள் அறுசுவையை கொடுத்தால்தான், ஸ்டிரைக் வாபஸ் ஆகும்.
வெயிலில் அலைந்து பாரத்தால் தெரியும், தொடு உணர்வின்* கோபம்.
ஏசி க்குள் நுழைந்தவுடன் அது உடனே நமக்கு சுவர்க்கத்தின் கதவுகளை திறந்து விட்டுவிடும்.
அடுத்து மனமோ மிக மோசமானது.
ஆசைப்பட்டதை அடைந்தால் நாம் தப்பித்தோம்.
இல்லையேல், கம்பி எண்ண வைத்துவிடும்.
*யோகியான பின்னரும், மனதின் நியாயமான, முடிந்த ஆசைகள்
கன்டிப்பாக நிறைவேற்றப் படவேண்டும்.
இல்லையேல்,
நமது சாட்சி நிலை, விழிப்பு நிலை சிறிது நேரத்திற்காவது
ஆட்டம் கண்டுவிடும்.
ஆகவே
இயல்பு, வழக்கம், *சுபாவம்* என்று ஒவ்வொன்றுக்கும் உண்டு.
அது இயற்கை.
அதன்படிதான் அவைகள் செயலபடும்.
எப்படியென்றால்,
ஒரு கோழி பத்து முட்டைகளை பொரித்தது. அதில் ஐந்து
வாத்து முட்டை.
பத்து குஞ்சுகளோடு கோழி இரை பொறுக்க ஒடைக்கரை பக்கம் சென்ற போது
ஐந்து வாத்து குஞ்சுகளும் ஓடை தண்ணீரைப்பாரத்து அதை நோக்கிச்சென்று நீந்தின.
கோழிக்குஞ்சுகளோ தண்ணீர் பக்கமே செல்லவில்லை.
காரணம்
*சுபாவம்*
வாத்துக்குஞ்சுகள், முன்பின் பழக்கமில்லாமலே
தன் இயற்கை சுபாவப்படி நீருக்குள் செனறது.
அப்புறம்
பிறந்த குழந்தைக்கு "சேனை" எனறு சர்கரை கலந்த நீரை முதன் முதலாக
கொடுப்பார்கள்.
இனிப்பு நாக்கில் பட்டவுடன்
குழந்தை நாக்கை "சப்புகொட்டும்"
இனிப்பிற்கு நாக்கின் "சுபாவம்" சப்புக்கொட்டுதல் ஆகும்.
இனிப்பை குழந்தையின் நாக்கு இதற்குமுன் ஸ்பரிசித்ததே இல்லை.
நாக்குக்கு உரிய கடமை ,அதன் சுபாவத்தால் இங்கு நிறைவேற்றப்பட்டது.
எனவே
நம் முழு உடலும், அதன் அவையங்களும்,
நமது தான்
என்று நினைக்கக்கூடாது.
அது அது தனித்தனியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவைகள் நமக்கு உதவி, நம்மடம் உதவிகளை பெற்றுக்கொள்கிறது.
எனவே
ஐம்புலன்களையோ, மனதையோ அடக்க முடியாது.
தாஜா செய்து
அவைகளின் உதவியுடன்
*யோக நிலையை*
அடையவேண்டும்.