பழக்கத்தின் வலிமை:
~~~~~~~~~~~~~~~
தனியாக வாழ்வது
மிக மிக கடினம்.
அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.
இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.
ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.
ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்,
பிறகு நாட்கள் ஆக, ஆக
அதுவே பழகி போயிருக்கும்.
நீங்கள் அவா்கிட்ட போய் கேட்டீங்க என்றால்.
என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு.
என்று தானே சொல்வாா்.
இது தான் பழக்கத்தின் வலிமை.
முதலில் கட்டாயமாக்க வேண்டும்.
மனம் எதிா்க்கும்.
பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.
கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.
இது தான் பழக்கத்தின் பயிற்சி.
எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ
அதுவாகவே நீங்கள் ஆகிவிடுகிறீா்கள்.