விண்ஞானம்
****************
பின் வரும் வரிசை பெருவெடிப்பு ஆரம்பமானதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருட்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றது என்பதை குறிப்பதாகும்.
வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது.
இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.
பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.
அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின.
மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தன்னுடைய வெப்பத்தை தணித்ததினால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும் உருவாகின.
அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன.
அதனால் முறையே ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின.
பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின.
இந்நிகழ்வுகளுக்கு எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோற்றம் பெற்றன.
தற்காலத்தில் இருந்து இவை தோற்றம் பெற்று ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.