Tuesday, 19 July 2016

வேதாந்தம் ஓர் அறிமுகம்*

*வேதாந்தம் ஓர் அறிமுகம்*
1) *காயிக கர்மாணி* (உடம்பினாலே செய்யக்கூடிய கர்மாக்கள்),
உடம்பினாலே செய்யக்கூடிய கர்மாக்களான பூஜை, யாத்திரை, பிரதக்ஷிணம் பண்ணுவது சகமனிதர்களுக்கு உபகாரம் பண்ணுவது, கோவில் உழவார பணிகள் செய்து இப்படி உடம்பினாலே செய்யக்கூடிய கர்மாக்கள் எல்லாம் காயிக கர்மாக்கள் என்று சொல்லப்படும்.
2) *வாசிக கர்மாணி* (வார்த்த்தைகளால் செய்யக்கூடிய கர்மாக்கள்),
வேதபாராயணம், சுலோகங்கள் பாராயணம் செய்வது, நாமஜெபம், ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்வது, ஒரு நல்ல வார்த்தைகளை சொல்லி மனுஷ்யர்களுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுப்பது இவையெல்லாம் *வாசிக கர்மாணி* (வார்த்த்தைகளால் செய்யக்கூடிய கர்மாக்கள்) என்று சொல்லப்படும். எனக்கு உலகத்துக்கு உபகாரம் பண்ணனும் அப்படின்னு ரொம்ப ஆசை, ஆனால் எனக்கு பெரிய பொருள் வசதி எதுவும் இல்லை என்று சொல்வார்கள். கவலையே பட வேண்டாம், பகவான் முன்னலே நின்று
*ஸர்வே பவந்து சுகின:!,* *ஸர்வே ஸந்து நிராமயா:!!,*
*ஸர்வே பத்ராணி பஸ்யந்து:!, மா கஸ்சித் துக்க பாக் பவேத்!!* இந்த ஸ்லோகத்தை மனதார நினைத்து பகவான் முன்னாடி தினமும் ஒரு முறை சொன்னாலேயே போதுமானது.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும், சுகமாக இருக்கட்டும் இதைவிட பகவானிடம் உலகத்திற்கு வேறு ஏதாவது கேட்க முடியுமா. இந்த ப்ராத்தனையை பகவானிடம் வைக்க ஒருவர் மனது எவ்வளவு விஸாலமாக இருக்க வேண்டும்.
3) மானஸ கர்மாணி (மனதினாலே செய்யக்கூடிய கர்மாக்கள்)
உடம்பினாலேயும் கர்மா பண்ணமுடியலே, வாசிகத்தினாலும் கர்மாவை பண்ண முடியலே அப்படின்னா, உட்கார்ந்த இடத்திலேயே பகவானை மனதால் நினைத்து அனைத்து கர்மாவையும் பண்ணுவது மானஸ கர்மா என்று சொல்லப்படும், அப்படி மானஸ கர்மாவை பண்ண தெரியுமோ தெரியோதோ அப்படின்னு ஆச்சார்யாளே எல்லாத்தையும் சுலோக வடிவத்துலே சொல்லி வைத்திருக்கிறார். சிவமானஸ பூஜை, தேவி மானஸ பூஜை என்று சொல்லி வைத்திருக்கிறார். நம்முடைய வேலை அதை தெரிந்துகொண்டு எல்லா காரியத்தையும் மனஸாலேயே செய்வது மட்டும் தான். எல்லாம் தங்க கிண்ணம், வைர ஆபரணம், தங்க சிம்மாசனம், எல்லாம் மனதாலேயே பகவானுக்கு சமர்ப்பிக்கிறது. இதனால் ஒரு செலவும் நமக்கு கிடையாத.
வாழ்க வளமுடன்