புத்தரின் ஞான அனுபவம்
ஓஷோ
"நான் ஞான விழிப்புணர்வு பெறும் முன் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் ""புத்தர்சொன்ன போது அது விருப்பமாகவே இருந்தது
இந்த விருப்பத்தால் புத்தர் வெகு காலம் ஞான விழிப்புணர்வு பெறாமல் இருந்தார் அவர் ஆறுவருடங்கள் தேடி அலைந்தார்ஆனால் பயன் இல்லை ஓரு நாள் புத்த கயாவிற்கு அருகில் உள்ள நிரஞ்ன ஆற்றில் குளித்த பிறகு அவரால் ஆற்றை விட்டு வெளியே வர முடியவில்லை பல விரதங்கள் கடைபிடித்ததால் மரத்தின் வேரைபிடித்து கொண்டு இது போதும் எண முடிவுக்கு வந்தார் முற்றிலும் ஊக்கம் இழந்தார் ஆன்மிக சாதானை எல்லாம் செய்து பார்த்து விட்டார் பயன் இல்லைஇனிமேல் முயன்று பார்க்க எதுவும் இல்லை போதி மரத்தின் அடியில் விருப்பம் ஏதும் இன்றி இரவை கழித்தார்
"""""காலையில் கண் விழித்து போது விண்மீன்கள் அஸ்தமனமாகி கொண்டு இருந்ததை பார்த்தார் அவர் கண்கள் பனிமுடியவாறு இல்லாமல் தெளிவாக இருந்தது அவர் மனதில் விருப்பம் இல்லை கடைசி விண்மீன்கள் அஸ்தமனமாகிய அதே சமயம் இவருக்குள் ஏதோ சுருங்கி சருகாய் சாய்ந்தது இவருடைய அகந்தை தன்நிலை நான் என்ற உணர்வு மாயந்தது விருப்பம் இல்லை என்றால் அந்த நான் என்ற என்ற அகந்தை தலைநிமிர்ந்து நிற்க முடியாது """"இந்நிலையில் ஞானம் அடைந்தார் """"ஆறு ஆண்டுகள் விருப்பமே ஞானத்திற்கு தடையாக இருந்தது
ஆனால் விருப்பத்தில் ஆரம்பிக்க வேண்டும் அது நிகழக்கூடிய அத் தருணத்திற்கு அழைத்து செல்லும் அந்த விருப்பம் அதன் பயனற்ற தன்மைக்கு அழைத்து செல்லும் விருப்பம் இல்லாமல் எதையும் ஆரம்பிக்கமுடியாது
"""""செயலற்று இருக்க செயல் தேவை""