*நான் ஒரு இறுக்கமான மனிதனல்ல*
*விளையாட்டுத்தனத்திலிருந்தே* *உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்கின்றேன்.*
என்னுடைய செய்தி மிகவும் சாதாரணமானது.
கடவுள் எனக்குள் இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடித்தேன்.
என்னுடைய முழு முயற்சியும்
உங்களையும் உங்கள் உள்ளே பார்க்கச் செய்வதே.
இது சாத்தியமானது.
இதற்காக உங்களுக்கு உதவி செய்வதற்கோ
அல்லது பாதுகாப்பளிப்பதற்கோ
நான் இங்கு இருக்கவில்லை.
உங்களுக்கு உதவி செய்தால்
பழையதே தொடரும்.
எல்லாவகையான உதவிகளும்
பழையனவற்றுக்கு உதவுவதற்கே.
பழைய வாழ்விற்கே.
நான் எந்தவகையிலும் இதற்கு உதவப் போவதில்லை.
மாறாக உங்களை அழிப்பதற்கே வந்திருக்கின்றேன்.
ஏனனில் அதிலிருந்துதான் புதியது பிறக்கும்.
புதிய மனிதர்.
புதிய பிரக்ஞை..
*---ஓஷோ--*
🌺🌺🌺🌺🌺🌺🌺
*புத்தர் கூறுகிறார்*
மனிதன் மனதால்தான் வாழ்கிறான்.
மனம் இருக்கும் வரை துன்பம் நிச்சயம் இருக்கும்.
மனதை அறிந்தவனால் மட்டுமே அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.
மனம் என்றாலே ஒரே எண்ணக் குவியல்கள் தான்.
ஒரு ஏழைக்கு ஒரு சில எண்ணங்கள் தான்.
ஆனால் ஒரு பணக்காரனுக்கு ஏகப்பட்ட எண்ணக் குவியல்கள்.
ஏழை - பணக்காரன் என்பது மனதைப் பொறுத்தது
அது வாழ்க்கையைப் பொறுத்தது அல்ல.
*நிம்மதி என்பது பணத்தில் இல்லை மனத்தில்தான் இருக்கிறது*
🌹🌺🍇🍒🙏🌷🍖
*ஓஷோ சிந்தனைகள்..*
மீண்டும் புல் தானாகவே வளருகிறது.
இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?
நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.
இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.
ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.
ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.
சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் - ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.
இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.
அவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.
🌺🌺🌺🌺🌺🌺🌺
*நேசம்*
மேலும் அதிக நேசமாக இருத்தல்
நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.
உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.
நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.
மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.
அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.
யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சநேதோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!
🔥நெடிய வரலாற்றில், முதன் முதலாக , கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான்.
🔥 முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் தன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான்.
🔥வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்க முடியும் என்பதை அவன் சோதித்து அறிந்துவிட்டான்.
🔥 போர்க்காளத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டுகொண்டான்; கையில் வாள் ஏந்திய நேரத்திலும் முழுமனதோடு அன்பு பொழிய முடியும்.
🔥அதனால்தான் கிருஷ்ணன்,
எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான்.
🔥அவனுடைம இந்த முக்கியத்துவம் காலப் பெருவழியில் தொடர்ந்து வழர்ந்து கொண்டே செல்லும் மகான்கள் , தீர்க்கதரிசிகளின் ஒளியும் பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுருத்தும் உலக மதங்கள் கொண்டே குப்பைத்தொட்டியில் வீசப்படும்போது, கிருஷ்ணனின் சுடர் தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும்.
🔥முதல் முறையாக, மனிதன் அவனை உணர்ந்து கொள்ளமுடிவதாலும் அவனைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளப்போவதாலும்தான் அப்படி நிகழப் போகிறது.
🔥முதல் முறையாக மனிதன் உண்மையாகவே அதற்குத் தகுதியுடையவனாக ஆகப் போவதாலும், அவனது ஆசிர்வாதங்களுக்கு ஏற்றவனாக ஆகப்போவதாலும்தான் அப்படி நிகழப்போகிறது.
☁ஓஷோ☁☁
🌹🌹🌹🌹🌹🌹🌹
நான் அறியவில்லை
'எனக்குத் தெரியும்'என நீங்கள் சொல்லும் கணத்திலேயே நீங்கள் ஒரு மூடப்பட்ட வட்டமாக இருக்கிறீர்கள்.அதன் பின் கதவு திறப்பதில்லை.ஆனால் எனக்குத் தெரியாது எனச் சொல்லும் போது அதன் பொருள்,நீங்கள் கற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறீர்கள் என்பதாகும்.
'நான் அறிந்திருப்பது எதுவாயினும் அது அற்பமானதே,வெறும் குப்பையே!'என்ற உணர்வு நம்மிடையே இடைவிடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.
புத்தரைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது அல்ல அறிவு. நீங்களே ஒரு புத்தராகும் போது அதுதான் அறிவு.
'நான் அறியவில்லை'என்னும் அறிவே உங்களுக்கு உதவப் போகும் அறிவு.
இது உங்களைப் பணிவுள்ளவர்களாக ஆக்கும்.
அகங்காரம் மறையும்.
அறிவே அகங்காரத்தின் தீனி.
ஓஷோ ----