மன்னித்தல்
ஒரு பள்ளியில் ஓர் ஆசிரியை ஒரு விளையாட்டை மாணவர்களுக்குக் கற்பிக்க நினைத்தார். அவர் மாணவர்களிடம் சென்று ”நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கூடை கொண்டுவரவேண்டும் அந்தக் கூடையில் நீங்கள் வெறுக்கும் நபரின் பெயரை ஒரு உருளைக்கிழங்கின் மீது எழுதி அதில் போட்டு கொண்டுவரவேண்டும்” என்று கூறினார். அதே போல் மாணவர்கள் கூடையைக் கொண்டு வந்தனர். சில மாணவர்கள் ஒரு உருளைக்கிழங்கையும், சிலர் இரண்டு, மூன்று உருளைக்கிழங்கையும் இன்னும் சிலர் ஐந்துக்கு அதிகமான உருளைக்கிழங்குகளையும் கூடையில் போட்டு கொண்டுவந்திருந்தனர்.
ஆசிரியை மாணவர்களைப் பார்த்து ”நீங்கள் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை ஒரு பையில் போட்டு 15 நாட்கள் நீங்கள் செல்லும் இடம் எல்லாம் உடன் கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறினார். மாணவர்களும் அதை ஒப்புக் கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல உருளைக்கிழங்குள் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பத்தன. அதிக உருளைக்கிழங்குகளை வைத்திருப்பர்கள் அதிக துர்நாற்றத்தை அனுபவிக்க வேண்டி வந்தது. குறைவான உருளைக்கிழங்கை வந்திருந்தவர்கள் குறைவான நாற்றத்தையும் அனுபவித்தனர். 15 நாட்களுக்குப் பிறகு இந்த விளையாட்டு முடிவுக்கு வந்தது.
ஆசிரியை மாணவர்களைப் பார்த்து” 15 நாட்கள் உருளைக்கிழங்கை நீங்கள் உங்களுடன் வைத்திருந்த போது எப்படி உணர்ந்தீர்கள்” என்று கேட்டார். உடனே மாணவர்கள் ” நாற்றமடைந்த உருளைக்கிழங்கை தங்களுடன் செல்லும் இடம் எல்லாம் கொண்டுசென்றது மிகவும் வெறுக்கத்தக்கதாகவும் மிகவும் கடினாமாகவும் இருந்ததாகக் கூறை கூறினர்.
உடனே ஆசிரியை மாணவர்களைப் பார்த்து இந்த விளையாட்டின் பின் உள்ள உண்மையை இப்பொழுது உங்களுக்கு சொல்லப் போகிறேன் என்று கூறினார். எப்படி நாற்ற மடைந்த உருளைக்கிழங்குகளை உடன் வைத்துக் கொண்டிருப்பது உங்களால் எப்படி பொறுக்க முடியவில்லையோ அதே போல் மற்றவர்கள் மீது உள்ள கோபத்தையோ அல்லது வெறுப்பையோ நம் இதயத்தில் தொடர்ந்து சுமந்து கொண்டிருப்பது உங்கள் இதயத்தை தொடர்ந்து மாசு அடைய செய்து கொண்டிருக்கும். அதனால் உங்கள் இயத்தில் மற்றவர்கள் மீது இருக்கும் கோபம், வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றை வீசி எறியுங்கள். மன்னித்தல் என்ற மருந்தால் இதயத்தை சுத்தப் படுத்துங்கள். இப்பொழுது உங்கள் இதயம் அமைதி அடைவதை உணர்வீர்கள்.