"பாவம் அனைத்தையும் நாசம் பண்ணிடும்
ஆவி முகத்தினை அறியாத பொது
மரணமும் ஜெனமும் சகடமும் போல
சுழற்றிடும் அதனால் முக்தியும் ஏது........???"
நம்முடைய பாவம் அனைத்தையும் நாசம் செய்வது நம்முடைய விழிப்புணர்வு மட்டுமே.
அந்த விழிப்புணர்வை தருவது அவி முக்தமாகிய ஆக்கினை தவம்.
நாம் பிறந்ததிலிருந்து இன்றுவரை நாம் செய்த அனைத்து செய்களுக்கும் விளைவாக வருவதை துரிய தவத்தால் அறிந்துகொள்ள முடியும்.
இதுவே பிராரப்தம் என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
“தன்னை அறிந்த தத்துவ ஞானிகள்,
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்,
பின்னைவினையை பிடித்து பிசைவார்கள்,
சென்னியில் வைத்து சிவன் அருளாலே....” என்று சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
நம்முடைய முன்னோர்களின் வினைப் பதிவு சாந்தி தவத்தால் குறையும்.
அதனால் இதை சஞ்சிதம் என்று கூறுகிறார்கள்.
சஞ்சிதம் என்றால் ‘மூட்டை’ என்று பொருள்.
எது மூட்டை என்றால்......???
நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பதிவுகள் தான்.
நாம் இதுவரை செய்த ஏற்படுத்திய பதிவுகள் மற்றும் முன்னோர்களின் வழி வந்த பதிவுகள் ஆகிய இவை இரெண்டையும் ஒன்று சேர்த்து பதிவுகளின் தரத்தை குறைக்க உதைவியாக இருப்பது சாந்தி தவம்.
இனி செய்யப்போகும் அணைத்து செயலகளையும் ஒழுங்கு செய்வது ஆக்கினை தவம்.
கடந்த கால் அனுபவம், தற்கால சூழ்நிலை, இவை இரெண்டையும் கணித்து வருங்கால விளைவை எண்ணி செயலாற்றும் வல்லமையைக் கொடுப்பது ஆவி முக்தம் என்னும் ஆக்கினா சக்கரம்.
ஆக ஆக்கினா சக்கரத்தை அறியவில்லையானால் ஒருவனால் தன் பாவத்தை கண்டு கொள்ளவே முடியாது.
பிறகு எப்படி தம் பாவத்தை குறைக்க முடியும்.......???
ஜெனமும், மரணம் யாரையும் கேட்டு நடப்பதில்லை.
அது ஒரு சகஜமான, இயற்கையான சுழற்சி உடைய செயல்.
அதை தடுக்கவோ, அல்லது மாற்றியமைக்கவோ முடியாது.
ஆசைகளை சீர் படுத்தாமல், நம்முடைய ஆசைகள் நிறைவு பெறாமல் இருக்கும் பட்சத்தில் பிறவித் தொடர் நீண்டு கொண்டே தானே இருக்கும்.
பிறகு முக்தி எப்படி சாத்தியப்படும்.....???
ஆனால், தவம் செய்பவர்களால் தம் எண்ணத்தை சீர்மை படுத்தி, செய்களை ஒழுங்கு படுத்தினால் பாவங்களின் தண்டனைகளின் தன்மை குறையும்.
ஆசைகள் சீர்மையாகும்.
மனம் நிறைவு பெறும்.
இறக்கும் தருவாயில் ஏக்கங்களோ, ஆசைகளோ உயிர் பிரிவதற்கு தடையாக இருக்காது.
முக்தி நிலை கைகூடும்.
எனவே தியனாம் செய்திட வேண்டும்.......!!!