Sunday, 17 July 2016

பிராத்தனை

🌺ஸ்ரீசாரங்கா ஸ்ரீரங்கா🌺

🌷மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல்
உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்
🌷"ஒரே ஒருமுறை"🌷 தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது. ஏனென்றால்
அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர்.
அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும். இதை
புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

🌷🌷ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு
அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு
தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு. கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும்
பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.

மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு
தெரிந்ததெல்லாம் அவனே என்பதால்
மறுபடியும் ஒரு வேண்டுதல்!!
இதுவே அத்தாய் கடவுளே🌷🌷 "எனக்கு
அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"🌷🌷
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை
வசந்தமாகி இருக்கும்.

🌷புரியும்படி கூற
வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல்
என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க
வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே
தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய
அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான
கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.

🌷உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம்
அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி
அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே
ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.
உங்கள்
தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்
ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால்
அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!! எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற
உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும்
நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

🌷🌷இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்
இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!!🌷🌷

🌺ஹரே கிருஷ்ணா🌺