Sunday 22 February 2015

எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள்

ம் எதிர்பார்ப்புகளே மனதில் எண்ணங்களாக தோன்றுகின்றன. அவற்றின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும். வாழ்க்கையில் எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள்மாற்றங்களை காண்போம்.

வாழ்வில் வெறும் எண்ணங்கள் மட்டும் வெற்றியை தந்துவிடாது. ஆனால் அடிப்படை ஏணிப்படிகளாக இருப்பது எண்ணங்கள்தான். முன்னேற்றத்துக்கு எண்ணங்கள் எப்படி கைகொடுக்கிறதுஇதுபற்றிய ஆய்வுகள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இங்கே நாம் காணப்போகும் சில ஆய்வு முடிவுகள் உங்களை உற்சாகப்படுத்தும். ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆய்வு. அதன் முடிவுகளும் ஆச்சரியமானவை. இனி உங்கள் எண்ணங்களையும்,பலன்களையும் வலம் வரலாம் வாங்க...

இது சாதாரண மாணவர்களை சாதனை சிகரங்களாக உயர்த்திய ஆய்வு. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வல்லுனர் ராபர்ட் ரோசன்தல் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஒரு மாணவன் எப்படி இருந்தாலும் "நீ ஜெயித்துவிடுவாய்உன்னால் முடியாதா?'' என்று உற்சாகப்படுத்தினால் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியதுதான் இந்த ஆய்வு.

திட்டப்படி ஆசிரியர்சில மாணவர்களை தேர்வு செய்து இவர்கள் திறமைசாலிகள் என்று மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல் பல நேரங்களிலும்பலர் முன்னிலையிலும் ஊக்கப்படுத்தப்பட்டனர். இந்தப் பாராட்டை அடிக்கடி கேட்ட மாணவமாணவிகள் இடையே புத்துணர்வு பொங்கியது. அவர்கள் ஆசிரியரின் நம்பிக்கையையும்பாராட்டையும் உண்மையாக்கும் வகையில் பலவழிகளிலும் சிறப்பாக செயல்படத் தொடங்கினார்கள். அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமின்றி சாதனையாளர்களாக உயரும் அளவிற்கு தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவு ஆசிரியர்களுக்கும் சரிஉளவியல் வல்லுனர்களுக்கும் சரி ஆச்சரியத்தையே உண்டாக்கியது. ஒருவரைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தால் அவர்களும் எதிர்மறையாகவே செயல்பட ஆரம்பிப்பார்கள். நாம் அவரிடம் கொண்டுள்ள எதிர்மறை எண்ணம்தான் இதற்கு காரணம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.

ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் நாம் பிறரிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ அதையே அவர்களது மனதில் விதைப்பதால் அதையே அறுவடை செய்கின்றோம். நல்லதையே நினைத்து எதிர்பார்த்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நல்லதையே வெளிப்படுத்துவார்கள்.

இதுவும் ஒரு சுவையான ஆய்வு. ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் எண்ணங்கள் எவ்வாறு அவர்களில் மாற்றங்களைத் தருகிறது என்பது குறித்த ஆய்வாகும்.

இதற்காக ஒரு வகுப்பு மாணவமாணவிகளில் ஒரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் திறமைமிக்கவர் என்று கூறப்பட்டது. மற்றொரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் சற்று திறமைக் குறைவுடையவர் என்று கூறப்பட்டது.

ஆசிரியரிடம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பாடங்களை புரியும்படி நடத்தமாட்டார் என்று கருதியதால் மதிப்பெண் சதவீதம் குறைந்தது. ஆசிரியர் திறமையானவர் என்று கருதியவர்கள் ஆர்வத்துடன் கற்றதை காண முடிந்தது. இது அவரவர்களின் எதிர்பார்ப்பின் விளைவே என்பது வெளிப்படையானது.

எதிர்மறை எதிர்பார்ப்பும் இல்லாமல்ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்பும் அதிகளவில் இல்லாமல் அவரவர் எந்த அளவிற்கு அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியுமோ அதற்கு உறுதுணையாக இருத்தலே சிறப்பாகும். இயல்பு நிலையில் செயல்படுவதே தங்களின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த உதவும்.

1940-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களில் மிகவும் திறமையானவர்களாக விளங்கிய 95 பேர் உளவியல் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது வளர்ச்சியை 30 ஆண்டுகள் கண்காணித்து குறிப்பெடுக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களும் இதற்கு அனுமதித்து பலதகவல்களை அவ்வப்போது கூறிவந்தனர்.

1970-ம் ஆண்டு ஆய்வு முடிவுக்கு வந்தது. இறுதி நேர்முகத் தேர்வை 30 வயதைக் கடந்த ஜார்ஜ் வேலியண்ட் என்பவர் நடத்தினார். அப்போது நேர்முகத் தேர்வில் பங்கெடுத்தவர்கள் நடுத்தர வயதை தாண்டி இருந்தனர். செனட் உறுப்பினராகவும்பத்திரிக்கை ஆசிரியராகவும்தொழில் முனைவோராகவும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினர்.

ஆய்வின் அடிப்படையில் பலவிவாதங்களும் நடந்தன. அதன் பின்னர் ஜார்ஜ் வேலியண்ட் தனது நேர்முகத் தேர்வு அனுபவத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அதில் சிலரை பேட்டி காணும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும்இன்னும் சிலரை பேட்டி காணும்போது தனக்குள் தன் திறமையின் மேலேயே சந்தேகம் ஏற்படும் உணர்வு மேலோங்கியதாகவும் குறிப்பிட்டார்.

ஏன் தனக்கு இருவிதமான அனுபவம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது ஒரு உண்மையை உணர்ந்தார். அதாவது பேட்டி எடுக்கும்போது யாரிடம் எல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாரோ அவர்களின் சுபாவமே அப்படித்தான். அவர்களை யார் பேட்டி எடுத்தாலும் அவ்வாறுதான் தோன்றும் என்று அறிந்தார். அவர்கள் சமூகத்துடன் சுமுகமாக ஒத்துப்போகத் தெரியாதவர்கள் என்றும் உணர்ந்தார்.

யாரிடம் பேட்டி எடுத்த அனுபவம் இனிமையாக அமைந்ததோ அவர்கள் சமூக ரீதியாகவும் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்ததை கண்டார். அவர்கள் யதார்த்தத்துடன் செயல்பட தெரிந்தவர்கள் என்பதையும் அவரால் அறிய முடிந்தது.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் உணர்த்தும்பாடங்கள் உன்னதமானவை. இவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதான்.

உங்களை யாராவது அலட்சியமாக நினைத்தாலும்இழிவுபடுத்தினாலும் உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.

மற்றவரின் குறைக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆனால் நீங்களும் யார் மனதையும் காயப்படுத்தாமல் செயல்பட பழகிக் கொள்ள வேண்டும்.

நமது செயல்களையும் ஆராய்ந்து வரவேண்டும். எண்ணங்கள் அடிப்படை என்றாலும் செயல்களே முன்னேற்றம் தரும். எனவே எந்த செயலும் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தாமல் உள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் கூறியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் நீங்கள் அறிந்து கொண்ட உண்மைகளை மனதில் அசைபோட்டு அன்னப் பறவை போல சரியானவற்றை சரியான வகையில் உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துக்கள். வாழ்க்கையின் உண்மைகள் அப்படியே பறித்து சாப்பிடும் பழங்கள் போன்று இருக்கும். சில நேரங்களில் பலாப்பழத்திலிருந்து எடுத்து சாப்பிடக்கூடிய பலாச்சுளை போல இருக்கும். வாழ்க்கை என்பது விபத்தல்லவிஞ்ஞானம். ஆராய்ந்து அறிந்தால் உயர்ந்துவிடலாம்.

எனவே ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி பலவித அனுபவங்களால் நேர்மறை எண்ணங்களை கொண்டு வாருங்கள். உங்கள் குழந்தையும் சாதனையாளராக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை

யாரும் வீணாகக் கூடாது

உலகில் எத்தனையோ படைப்புகள் உள்ளன. ஒவ்வொரு படைப்பும் உயிர்த் துடிப்பானவை. அதனதன் பிறப்பில் உன்னதமானவை. ஒவ்வொரு படைப்பும் தன் தேடலைத் தேடியே ஜீவிக்கின்றன. ஜீவன் என்றால் உயிர். இந்த உயிர் பயன்படாமல் அழிந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு படைப்பும் கவனமாக இருக்கின்றது. அதனால் அது தன் தேடலைத் தொடங்குகின்றது. ஜீவிப்பதற்காக. ஆம், இந்த உலகில் நல்லவண்ணம் வாழ்வதற்காக.

வாழ்க்கை எப்போதும், எல்லோருக்கும் சொல்வதைப் போல இருப்பதில்லை. இங்கு சோகம்தான் நிரம்பியிருக்கின்றது. போராட்டங்களும், பிரச்சினைகளும்தான் சோகம் நிறைந்த வாழ்வைச் சுகமாக மாற்றுகின்றன. இயல்பாக இருக்கவும் வைக்கிறது.

வாழ்வைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்...

ஒரு கடற்கரைக் கிராமம். அங்குள்ள ஒரு மீனவ இளைஞனைப் பார்த்து வேறு ஒருவர் கேட்கிறார், "கடல் ஆபத்தான இடமாயிற்றே... எப்படி நீ துணிச்சலுடன் மீன் பிடிக்கப் போகிறாய்?''

இளைஞன் சொல்கிறான், "என்ன செய்வது... நான் மீன் பிடித்தால்தான் உணவு உண்ண முடியும்.''

கேட்டவர், சட்டென்று கேள்வியின் திசைகளை மாற்றுகின்றார்-

"அது சரி... உன் தந்தை எப்படி இறந்தார்?''

"அவர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் சிக்கி இறந்தார்.''

"உன் தாத்தா?''

"என் தாத்தா ஒருமுறை அலையில் மாட்டிக் கொண்டு கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு அவரும் கடலுக்கு இரையானார்.''

"இவ்வளவு நடந்து முடிந்தபிறகும் எப்படி உன்னால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிகிறது?''

இப்போது அந்த இளைஞன் கேட்டவரைப் பார்த்து, "உங்கள் தந்தை எப்படி இறந்தார்?'' என்று கேட்டான்.

"நோய்வாய்ப்பட்டு இறந்தார்.''

"உங்க தாத்தா..?''

"அவரும் படுக்கையில் நோயில் கிடந்து பாடையாகிப் போனார்.''

"இப்படி உங்கள் பரம்பரையே படுக்கையில் கிடந்து இறந்து போயிருக்கிறார்கள். அப்புறம் எப்படித் தினமும் நீங்கள் தைரியமாகப் படுக்கப் போகிறீர்கள்?'' என்று பதிலுக்குக் கேட்டான்.

பதிலின்றி மவுனமானார் அவர். வாழ்க்கை, ஆபத்துகளும், துக்கங்களும், துயரங்களும் நிறைந்ததுதான். அதை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ முடியுமா? புறநானூற்றுப் புலவன் சொல்வானே, `நீர் வழிப்படும் புனைபோல' என்று. அதாவது ஆற்றின் ஓட்டத்தில் செல்லும் படகானது அதன் ஓட்டத்தோடு செல்வதைப் போல வாழ்க்கையும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்தப் படகை வழிநடத்திச் செல்கிற ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படுகிற விதத்தில் இருக்க வேண்டும். யாரும் இங்கே வீணாகி விடக் கூடாது.

டிசம்பர் 25.
இயேசு கிறிஸ்து மனிதகுமாரனாக மாட்டுத் தொழுவத்தில் தோன்றிய நாள். மாடுகள் அடைக்கப்படுகிற தொழுவம், அவர் பிறந்ததால் உயர்த்தப்பட்டிருக்கிறது. தொழுவத்தில் பிறந்த அவரைத்தான் கிறிஸ்தவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

அவர் மனிதகுலம் உயர்வதற்காக எடுத்துரைத்த சிந்தனைகள்தான் பைபிள் என்கிற வேதப்புத்தகம். வாழ்க்கைக்கான, குறிப்பாக இளைஞர்களுக்கான முத்தான மூன்று சிந்தனைகளை உரத்துச் சொன்னவர் இயேசு.

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், இந்த மூன்றும் வெற்றிக்கான விதைகள். சில விதைகள் பயனில்லாமல் சோடையாகிப் போகும். ஆனால் இது நம்பிக்கைச் செடியை வளர்க்கிற நல்ல விதை. கருத்து நிறைந்த விதை.

அழுகின்றவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் இயேசு. இது என்ன முரண்பாடு? அழுகிறவர்கள் எப்படி பாக்கியவான்கள் ஆவார்கள் என்று மனது கேட்கலாம். அழுபவன் எப்பொழுதுமே அழுது கொண்டிருக்க மாட்டான். பிறர் அழுவதையும் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சிந்துகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கு ஏதேனும் இரண்டு ஆதரவுக் கரங்கள் நிச்சயமாக நீளும். அவர்கள் ஆதரவு பெறுவார்கள். எவரும் இங்கே வீணாகி விடுவதில்லை. அதனால்தான், `என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தருவேன்' என்கிறார்.
  
இனிய இளையோரே! இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். சற்றே இளைப்பாறுதல் தருவேன். சற்று நேரம்தான். அதாவது, சிறிதுநேரம்தான். அதற்குப் பிறகு அவரவரின் தேடலைத் தேடியாக வேண்டும். தேடுங்கள், கண்டடைவீர்கள் என்று தெளிந்து சொன்னது இதன் வெளிப்பாடுதான். இதில் நீங்கள் எதை நோக்கித் தேடுகிறீர்களோ அதைக் கண்டடைய முடியும்.

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. ஆம், அது ஒரு தேடல். குழந்தைக்கான உணவு கிடைத்ததும் அதன் அழுகை நின்று விடுகிறது.

விளக்கைத் தேடி அந்த விளக்கை ஏற்றியவர்கள் வெளிச்சத்தை அனுபவிக்கின்றார்கள்.

27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்து கொண்டே வெள்ளையரின் அரசாங்கக் கதவுகளைத் தட்டினார் நெல்சன் மண்டேலா. தென் ஆப்பிரிக்கா சுதந்திரம் அடைந்தது.

சிந்தனைச் சிறகுகளை விரித்து, வைக்கத்தில் பெரியார் போராட்டத்தைத் துவக்கினார். வைக்கம் ஆலயக் கதவு திறந்தது. சமூகநீதி பிறந்தது.

தேடல்களைத் தொடங்கிய எவரும் வாழ்க்கைப் பயணத்தில் வீணாகிவிடவில்லை. அவர்கள் எல்லோரும் வரலாற்று ஏடுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நல்ல தேடல் வெற்றியைத் தரும்.

வெற்றி

வெற்றி தரும் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை என்பது சிலருக்கு தானாக இருக்கும். சிலர் அதை தனது பழக்க வழக்கங்களின் மூலம் வளர்த்துக்கொள்வார்கள். முயன்றால் முடியாது எதுவும் இல்லை என்பதற்கு ஏற்ப நாம் முயன்றால் நமது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் நமது முயற்சிகளிலும், செயல்களிலும் வெற்றிகளை குவிக்க இயலும்.
எனக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது என்று தயங்குபவர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில விஷயங்கள் கொடுக்கப்பட்டள்ளது. இவற்றை பின்பற்றி வந்தால் உங்கள் தன்னம்பிக்கை நிச்சயம் வளரும்.
அழகாய் உடுத்துங்கள்..
'ஆள் பாதி ஆடை பாதி' என்றொரு பழமொழி உண்டு. ஒரு மனிதனுக்கு கம்பீரத்தையும், தோற்றப்பொலிவையும் தருவது உடைகள் தான். எனவே எப்போதும் நன்றாக உடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடைகள் ஒழுங்காகவும், கவர்ச்சியாகவும் இல்லை என்றால் மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பாது.
குறிப்பாக வேலைக்கான இன்டர்விïக்களுக்கு செல்லும் போது உங்கள் உடை சுத்தமானதாக, நேர்த்தியானதாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் பேண்ட், சட்டை அணிந்து, அதை 'டக் இன்' செய்து கொள்ள வேண்டும். உங்கள் உடை கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில், டிசைனில் இருக்க கூடாது. அதே போல பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்து செல்லலாம். எந்த நிலையிலும் உடல் அழகை வெளிப்படுத்தும் உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். உங்களின் கண்ணியத்தை வெளிப்படுத்தும் வகையில் உங்கள் உடைகள் அமைய வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் இளம் தாடியுடன் இருப்பதை விரும்புகிறார்கள். இது தவறாகும். வேலைதேடும்போதும், வேலைக்கான இன்டர்வியூக்களின் போதும், வேலை செய்யும் இடத்திலும் சுத்தமாக முகச்சவரம் செய்து செல்வது நன்மதிப்பை தரும்.
மிக முக்கியமானது உங்கள் உடைகளில் தேவையில்லாமல் பைகள் வைத்துக்கொள்வது, கிழிந்த உடைகளை அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சுறுசுறுப்பாய் இருங்கள்...
ஒருவரது நடையைப்பார்த்தே அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிடமுடியும் என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்வார்கள். எனவே உங்கள் நடை சுறுசுறுப்பாக, கம்பீரமாக இருக்கட்டும். மெதுவாக, தளர்வாக நடப்பது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். எனவே நடக்கும் போது தன்னம்பிக்கை தரும் வகையில் நிமிர்ந்த பார்வையுடன் நேராக, வேகமாக நடக்கப்பழகுங்கள். வேகமான நடைஎன்றால் அது ஓடுவது போல இருக்க கூடாது. உங்கள் நடையில் சுறுசுறுப்பு காணப்பட வேண்டும் அவ்வளவு தான்.
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை...
ஒருவரது பார்வையை வைத்தே அவரது உள்ளத்தில் உள்ளதை அறிந்து கொள்ள முடியும். துவண்ட தோள்களும், தளர்ந்த நடையும் கொண்டவரால் எந்த செயலிலும் வெற்றி காணமுடியாது. செய்யும் செயலில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு செயல்பட்டால் தான் அவருக்கு வெற்றி வசப்படும். எதிரில் இருப்பவரை நேருக்கு நேர் பார்த்து பேசுவது, உங்கள் உடல் அசைவுகள் நேராகவும், ஓழுங்காகவும் இருப்பது அவசியம். எனவே எப்போதும் நேராக பார்த்து பேசுங்கள், அமரும் போது நிமிர்ந்த பார்வையுடன் அமருங்கள். தலைநிமிர்ந்து செய்யப்படும் காரியங்கள் உங்களை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும்.
எந்த செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட தயங்க வேண்டாம். முன்வரிசையில் இருப்பவர்களால் தான் எதிலும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட துரிதமாக செயல்பட வேண்டியது அவசியம். முன் வரிசையில் அமர்ந்தால் நாம் அதிகம் கவனிக்கப்படுவோம், நம்மிடம் அதிகம் கேள்வி கேட்பார்கள் என்று மாணவ-மாணவிகள் நினைப்பதுண்டு. இதுதவறான கருத்து. முன்வரிசையில் அமரும்போது தான் கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது. ஆசிரியரின் கண்காணிப்பும் நம் மீது உள்ளது என்ற எண்ணமே ஒருவரை கவனிக்கத்தூண்டும். இதன் மூலம் கல்விஅறிவு பெருகும். மேலும் முதல் வரிசையில் அமரும் போது பய உணர்வு குறையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
தயக்கத்தை விரட்டுங்கள்...
சிலர் திறமைகள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அதை வெளிப்படுத்த தயங்குவார்கள். நமது கருத்து தவறாக இருக்குமோ, மற்றவர்கள் நமது கருத்தை கிண்டல் செய்துவிட்டால் என்ன செய்வது என்று தயங்கியே மவுனம் காத்துவிடுவார்கள். இதுமிகவும் தவறு. நமக்குதெரிந்த தகவல்களை வெளிப்படுத்த தயங்க கூடாது.
குறிப்பாக வேலைக்கான நேர்முகத்தேர்வு மற்றும் குழுவிவாதங்களின் போது உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசினால் தான் வெற்றி பெறமுடியும். எனவே எந்த நிலையில் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேசவும், உங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் தயங்க கூடாது. இவ்வாறு பேசினால் தான் தயக்கம், பயம் அகன்று தன்னம்பிக்கை பிறக்கும். நமது பேச்சில் தவறுகள் இருந்தாலும் அது என்ன தவறு, அதை சரி செய்வது எப்படி என்று அறிந்து கொண்டு செயல்படமுடியும்.
ஹோம் ஒர்க் அவசியம்...
பள்ளிகளில் படிக்கும் போது ஹோம் ஒர்க் கொடுப்பது உண்டு. இந்த வீட்டுப்பாடம் என்பது நாம் வகுப்பில் படித்தவற்றை எழுதிப்பார்க்கும் செய்து பார்க்கும் ஒரு முறையாகும். வீட்டுப்பாடம் எழுதும் போது நமக்கு படித்தவற்றை நினைவு படுத்திக்கொள்ள முடியும், நமது நினைவுத்திறனும் இதனால் அதிகரிக்கும்.
இந்த ஹோம் ஒர்க் முறை வேலை தேடும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய அம்சமாகும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, குழுவிவாதம் போன்றவற்றில் கலந்து கொள்ளும் முன்பு அதற்கு உங்களை தயார்படுத்திக்கொள்வது வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற பயிற்சி அவசியம்.