Saturday 30 September 2017

நம் வெற்றி

காதில் ஒரு பூச்சி
அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. திடுக்கிட்டு எழுந்தான். காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன்.ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான். அவரும் எவ்வளவோ பாடுபட்டார். தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன.
மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். எதற்கும் பலன் இல்லை.மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால் அவனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து விட்டது. மன்னன் பொலிவு இழந்தான்.
ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான். எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான். தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான்.
பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்த
ு ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன. பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்கப் போனாள்.அவருடைய காலில் விழுந்து கதறினாள்.
தன் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்.ஒரு சுபயோக சுபதினத்தில் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் துறவி. மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார். ராஜ வைத்தியருடன் கலந்தாலோசித்தார்.
பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார். அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார்.""இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.
இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன். எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள். அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.''அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லித் தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி.
அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன். கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான்.
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். அது"ராஜ மூலிகை' என்பதால் அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார்.
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது. மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன். சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி.
மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான். நன்றாக உண்டான். பழைய பொலிவு திரும்பி விட்டது.துறவி விடைபெற்றுக்கொண்டார்.
அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்.அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.
""குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது.""மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது. ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால் அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்.. அதைப் பற்றிச் சொல்லுங்களேன்.
''துறவி புன்னகை பூத்தார்.""பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?''""மன்னனின் செவிக்குள்.''""அதுதான் இல்லை. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம். சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை வெளியே வந்திருக்கும்.
அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
.''""குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிர
ுக்கலாமே?''""மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்கொண்டிருந்தான். அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்.. தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்.
''""அந்த மூலிகை?''""நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான். அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன். பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டுஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன்,. மன்னன் நம்பி விட்டான் அவன் நோயும் தீர்ந்தது.
.''சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.""இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டது. மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
''இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.""எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான். பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை. அது நம் மனதில் இருக்கிறது. பூச்சி காதில் இல்லை.
மனதில் இருக்கிறது.ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் மதிய உணவு இடைவேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும் பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம்நடக்க வேண்டும். ஒரு முறை ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள்.
அந்த அதிகாரி பாவம்.. தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்துவிடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார். பாதி தூரம் கடந்தவுடன் ""என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்த
ு விலகிக்கொண்டார்.""உன் தலையில வச்ச பேப்பர் வெயிட்ட நீ நடக்க ஆரம்பிக்கும்முன்பே எடுத்துவிட்டோம்.
இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே! ஹ ஹ ஹ ஹ ஹா..
.''இது நகைச்சுவை அல்ல;
இது நச்சென்று இருக்கும் வாழ்வியல் விளக்கம். காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டான் மன்னன்.
இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்!

Wednesday 20 September 2017

அதை பற்றி பேசாதீர்கள்..

நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..
.
அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....
.
" நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....
.
உங்களால் ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...நீங்கள் அப்படி நினைக்காதவரை.
.
அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றிற்கு வரவேற்பு விழா நடத்துகிறேர்கள்...
.
அப்படி ஏற்பட்டு இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..
.
நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..
.
எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன...அதுதான் மன இறுக்கம்..
.
முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்..பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...
.
உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....

வாழ்க நலமுடன்

Monday 18 September 2017

தக்கவைத்து கொள்ளுங்கள்

ஆஸ்பத்திரி ICU வில் அரை நாள் இருந்து பாருங்கள்,

அஷ்டமி கூட அதிஷ்டநாளாக தோன்றும்!

நடு இரவில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி பாருங்கள்,

நவமி கூட நல்ல நாளாக தெரியும்!

ராத்திரி முழுக்க காய்ச்சல் வந்த குழந்தையோடு இருந்து பாருங்கள்,

ராகுகாலம் ராசியான காலமாக தோன்றும்!

எமர்ஜன்சியாக ரத்தம் தேடி அலைந்து பாருங்கள்,

எமகண்டம் கூட ஏற்ற நேரமாக தோன்றும்!

ஆம்புலன்சில்  நோயாளியோடு சென்று பாருங்கள்,

ஆயுள் முழுக்க ஆனந்தம் மட்டுமே சொத்தாக தோன்றும்!

வாழ்வில் ஆரோக்கியத்தையும், தைரியத்தையும் தக்கவைத்து கொள்ளுங்கள், வேறு எதை இழந்தாலும் அதை பல மடங்காகக திரும்ப பெறலாம்!

Saturday 16 September 2017

உயர்வது எப்போது ..

"வாழ்க்கை" உயர்வது எப்போது ... ???

         ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.

  உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.

        நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நம் வாழ்க்கை இப்படி ஆனதே என்று புலம்பும் முன் வாழ்க்கையே மறுக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

       எப்பொழுதும் குழந்தைகள் பற்றிக் கடிந்து பேசும் போது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

   சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.

    சீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும நடந்தே செல்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நமது பணி பற்றி பிறர குறையோ குற்றமோ சொல்லிப் புலம்புவதற்க்கு முன் பணி கிடைக்காமல் அவதிப்படுபவர்களை நினைத்துப் பாருங்கள்.

       இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.

இதையே வள்ளுவர் சொல்கிறார்,
"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் கான்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு"... !!!

Friday 15 September 2017

வானமும் தொட்டுவிடும் தூரம்தான்!

சரியான திட்டமிடல்:
*********************​தன்னம்பிக்கை கதை.

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.

அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன.

அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.

அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .

அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

எனவே தலைவர் போட்டிகளை
அறிவிக்கும்படி தன்னுடைய
உதவியாளர்களுக்குக்
கட்டளையிட்டார்.

நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்து விட்டது. இருவரையும்
நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி.

தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.

மறுநாள் இரண்டு வீரர்களையும்
அவருடைய இடத்துக்கு
வரவழைத்தார்.

” இளைஞர்களே! இதுவரை
உங்களுடைய பராக்கிரமத்தால்
உங்களுக்கு நிகர் யாருமில்லை
என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான் தலைவனாக முடி சூட்டப்படுவான்.

இப்போது உங்கள் இருவருக்கும் சில
ஆயுதங்களும் , சமையல்
பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும்
கொடுக்கப்படும்.

நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும்
வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள்.

நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக்
கடற்கரையில் வைத்துக்
கொளுத்துங்கள் .

அதிலிருந்து வரும்
புகையைக் கண்டவுடனேயே
இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன் தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் ” என்றார்.

மஞ்சள் மரம் என்பது அந்தக்
காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை
இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு
ஆளுக்கொரு தீவுக்குப்
பயணமானார்கள் .
பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும். இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும், மீன்களும் போதுமானதாக இருக்கும்.

ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான்
அவர்களுக்குப் பசி அடங்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள்
நியமிக்கப்பட்டார்கள்.
நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது.

படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக்
கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.

அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான், ”தலைவா , எங்களுக்குக்
கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக
இருந்தும் நான் சாமர்த்தியமாக
இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத் தாக்குப் பிடித்திருப்பான் என்ற
நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன்” என்றான்.

தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம்
உண்டாகிவிட்டது.

இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள்
பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .

இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது.

ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு.

இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.

கொஞ்சதூரம் காட்டுக்குள்
நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம். அங்கே மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.

அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடி வந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான்.

தலைவரை வணங்கி வரவேற்றான்.

”உள்ளே, வாருங்கள் தலைவா” என்று அழைத்துச் சென்று அமர வைத்தான்.

உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான்.

தலைவருக்கோ ஒன்றும்
புரியவில்லை.

” உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே. நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை
வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு
கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ?” என்றார்.

” கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே ” என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக்கொல்லை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

அவன் சொன்னான், ”தலைவா, நான் வந்த அன்றே எனது
தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன்.

இரண்டு மாதங்களிலேயே
அறுவடைக்குத் தயாராகி விட்டது.

நான் எந்தக் கவலையுமில்லாமல்
நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ
முடியும் ” என்றான்.

தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

”நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ-உன் அறிவாலும், உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய்."

*_காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்றார்._*

*அன்பு நண்பர்களே, கையில் கொடுக்கப்பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே*

*ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் நேரமானாலும் சரி.*

திட்டமிடுவது சரியானதாக இருப்பின் வானமும் தொட்டுவிடும் தூரம்தான்!

நிறைவானது வரும்போதுகுறைவானது ஒழிந்துபோம்.

படித்ததில் பிடித்தது!!!

||| ஒரு ஊரில் ஒரு குயவனும்
ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள்.

~ இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள்.

~அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

~குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது? என்று கேட்டான்.

~குயவன் அட போப்பா...!
~எனக்குக் களிமண்ணில் வேலை..
~நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு  கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

~உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது..? அலுப்புத் தட்டுகிறது போ..! என்று கொட்டாவி விட்டான்.

~அதற்கு வைர வியாபாரி சொன்னான் உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு...?

~உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. ~வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.

~இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும் என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

~எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா..?

~மகிழ்ச்சியான வேலைதான் எது..? என்று இருவரும் சிந்தித்தார்கள்.

~அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

^ ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார்.

^ இருவரும் அவரிடம் சென்று ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது..?

^ எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

^ பெரியவர் புன்னகைத்துக் கொண்டே உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா...? என்று கேட்டார்.

^ அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

^ உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்..?
என்று அவர்களிடம் கேட்டார்.

^ எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்...! பயத்துடன் பதில் சொன்னார்கள்.

^ அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு? பெரியவர் கேட்டார்.

^ களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான் என்று இருவரும் சொன்னார்கள்.

^ உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது.

^ அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள்.

^ அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள்.

^ நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள்.

^ மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது.

^ செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.

^ குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான் என்று முடித்தார்.

+ கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.

+ நிறைவானது வரும்போதுகுறைவானது ஒழிந்துபோம்.