Sunday 12 May 2019

திசை

ஒரு நல்ல கதை பகிர்வு:

இந்தக் கதையில் நீங்கள் தான் முக்கிய கதாப்பாத்திரம்.

ஒரு நாள், ஒரு விமானியுடன், ஒற்றை பயணியாக, விமானத்தில் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். திடிரென்று விமானத்தின் இஞ்சின் பழுதடைந்துவிடவே, விமானம் ஆகாயத்தில் தடுமாறுகிறது. எந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலைமை வருகிறது. அப்போது விமானி உங்களிடம், பாராஷூட் ஒன்றை கொடுத்து, தப்பி விடுமாறு உதவுகிறார்.

நீங்களும் பாராஷூட்டை எடுத்துக்கொண்டு வானிலிருந்து குதித்து விடுகின்றீர்கள். ஆனால் சோதனையாக அந்த பாராஷூட்டோ உங்களை ஒரு அடர்த்தியான காட்டிற்குள் எடுத்துச் சென்று இறக்கிவிடுகிறது. காட்டின் எல்லாப்புறமும் ஒரே மாதிரி இருக்கின்றது. காட்டின் எந்தப் புறம் ஓடினால் தப்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

சில நொடிகள் சுற்றிமுற்றி பார்க்கின்றீர்கள். அப்போது ஒரு பலகையில் காட்டின் இரு விதிகள் எழுதப் பட்டிருக்கிறது.

முதல் விதி, மனிதர்கள் எவரேனும் தவறுதலாக காட்டிற்குள் நுழைந்து விட்டால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டின் மிகக் கொடிய விலங்குகள் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து வந்து சேரும். எனவே ஒரு மணி நேரத்திற்குள் அந்த காட்டை விட்டு நீங்கள் தப்பித்தாக வேண்டும்.

இரண்டாவது, கிழக்கு பக்கமாக சென்றால் மட்டும் தான் அந்தக் காட்டை விட்டு வெளியே செல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்க்கின்றீர்கள். கிழக்கு திசை எங்கு இருக்கிறது என்று   தெரியவில்லை. என்ன செய்வது என்று ஒரு யோசனையும் வரவில்லை. காட்டு விலங்குகளின் பசிக்கு இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் வேறு ஒரு பக்கம்.

அப்போது அந்த இடத்தில் திடிரென்று ஒரு தேவதை உங்கள் முன் தோன்றுகிறது. உங்களின் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு, உங்களிடம் இரு பொருள்களை நீட்டுகிறது.

ஒன்று மணிப் பார்க்கும் கடிகாரம். அதன் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் தப்பிக்க இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு திசையை கண்டுபிடிக்க இயலாது.

மற்றொன்று திசைக் காட்டும் கருவி. இந்தக் கருவி மூலம் உங்களுக்குத் தப்பிச் செல்லக்கூடிய திசை தெரியும். ஆனால் நீங்கள் தப்பிக்க எவ்வளவு நேரம் மீதம் உள்ளது என்று தெரியாது.

தேவதை, உங்களிடம் இந்த இரு பொருள்களையும் காண்பித்து, “நான் உனக்கு உதவ முடியும். ஆனால் இந்த இருப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் நீ எடுத்துக் கொள்ள முடியும். உனக்கு எது வேண்டும்?” என்று கேட்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்தப் பொருளை தேர்வு செய்வீர்கள்? எது உங்களுக்கு மிக முக்கியமானதாக தோன்றும்?

திசையா, நேரமா?

வேகமா, வழியா?

ஆம், உங்கள் யூகமும் பதிலும் சரிதான். திசைகாட்டும் கருவிதான் உங்களுக்கு அதிக தேவையாக இருக்கும்.

இந்தக் கதைக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும் இதே நிலை தான்.  பல பிரச்சினைகள் நமக்கு வரும்போதும், சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது.

ஒருவர் எவ்வளவு தான் திறமைகள் கொண்டவராய் இருப்பினும், வேகமாக செயல்படக் கூடியவராய் இருப்பினும், சரியான வழியில் செல்லத் தெரியவில்லை என்றால், அவர் இலக்கை அடைவது இயலாதக் காரியமே.

வெற்றிக்கு வேகமாக ஓடுவதை காட்டிலும், சரியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது.

எனவே உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றிபெறட்டும்.
*திட்டமிடுங்கள் உழையுங்கள் வெற்றி பெறுங்கள்*

ஒவ்வொரு கொடிய சூழ்நிலையிலும்

எப்படியாவது, எந்த ரூபத்திலாவது ஒரு நல்ல க்ளு கிடைக்கத்தான் செய்யும் என்பதும்,

ஆனால் அதை புரிந்துகொள்ள நமக்கு மூளை வேண்டும் என்பதும் கூட இந்த கதையினால் கிடைக்கும் படிப்பினைகள் தான்...

Saturday 11 May 2019

மகிழ்சி

😊😊😊😊😊இன்றைய சிந்தனை..
...........................................

'' நம்மிடம்தான் உள்ளது'
...........................................

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிக வசதிகளோ, பொருளோ தேவையில்லை. மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனதைப் பொருத்தது.

எதற்கு எடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டு கவலைப்படுபவனை உல்லாச மாளிகையில் வைத்தாலும் அவன் முகத்தை தொங்க வைத்துக் கொண்டு கவலையோடுதான் இருப்பான்.

ஒரு அரசனுக்கு அரசு போகங்கள் இருந்த போதிலும் மன மகிழ்ச்சி ஏற்படவில்லை.அவன் ஒரு ஞானியை சந்தித்து மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுங்கள் என்றான்.ஞானி அவனுக்குஅறிவுரை சொல்ல விருப்பம் இல்லை.

அனுபவத்தில் அவன் உண்மையை அறிந்து கொள்வதற்கு ஒரு வழி செய்தார்.

மன்னனைப் பார்த்து அரசே,

”மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கும் ஒருவனது சட்டையை நீ அணிந்து கொண்டால் அந்த மகிழ்ச்சி உன்னையும் தொற்றுக் கொள்ளும். வேண்டுமானால் அதற்கு முயற்சி செய்து பார் என்றார்.

விடுவானா அரசன்,தன் நாட்டிலும்,பிற நாட்டிலும் மகிழ்ச்சியோடு இருப்பவர்களைத் தேட ஆரம்பித்தான்.
யாருமே தான் மகிழ்ச்சியோடு இருப்பதாக சொல்லவில்லை.

ஒவ்வொருவரும் வரும் தங்களுக்குள்ள ஒரு கவலையை,ஏக்கத்தை.துன்பத்தை அவனிடம் சொன்னார்கள்.

மனமுடைந்துபோன மன்னன்,ஒரு நாள் தன் குதிரையில் ஏறி ஒரு கிராமத்தின் பக்கமாக சென்றான்.உச்சி வேலை.சித்திரை வெயில் மண்டையை பிளந்தது.அந்த நேரத்தில் ஒரு விவசாயி.தன் நிலத்தை உழுது கொண்டு இருந்தான்.

அத்தோடு தன் கட்டைக் குரலில் ஒரு பாட்டை வேறு பாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டான்.அதைப் பார்த்த மண்ணுக்கு தகித்த சூரியன் அவனுக்கு நிலவு காய்வதைப் போன்ற குளிர்ச்சியைத் தந்ததோ என்று தோன்றியது.

இவன் இல்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றானே?என்று வியந்த மன்னன் அவனை தன் அருகில் அழைத்தான்.விவசாயியும் பணிவோடு அரசனிடம் வந்தான்.

நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாயா..? என்று அவனைப் பார்த்து கேட்டான் மன்னன். ஆமாம் ஐயா,நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன் என்றான் அந்த விவசாயி.

அதற்கு என்ன காரணம் என்ன..? உன்னிடம் நிறைய பணம் உள்ளதா?

பணமா?அதை நான் கண்ணால் கண்டு பல நாள் ஆயிற்றே என்றான் விவசாயி.

ஏராளமான நிலபுலன் வசதி இருக்கிறதா..?

இல்லை.ஐயா ,அதோ தெரிகிறதா ஒரு துண்டு நிலம். அது மட்டுமே என்னுடையது.அதை உழுவதற்கு கூட என்னிடம் மாடுகள் இல்லை.என் உறவினர்களிடம் இருந்து இரவல் வாங்கி வந்து நிலத்தை உழுது வருகிறேன் என்றான்.

வசதியே இல்லாத நீ எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாய்..?

தெரியவில்லை ஐயா, ஆனால் நான் மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றேன் என்றான் அந்த விவசாயி.

அப்படியானால் எனக்கு நீ ஒரு உதவி செய்வாயா? என்றான் அரசன்.

என்ன செய்ய வேண்டும் என்றான் அந்த விவிசாயி.

உனது சட்டை ஒன்றை எனக்குக் கொடு என்று அவனிடம் கெஞ்சிக் கேட்டான் அரசன்.

இதைக் கேட்ட அந்த விவசாயி,சிறிது நேரம் விழித்தான்.பிறகு சட்டையா,அதை நான் ஒரு போதும் அணிந்தது இல்லையே.என்னிடம் சட்டை என்று ஒன்று கூட இல்லையே என்று சொல்லி விட்டு குழுந்தையை போல சிரித்தான்.

மகிழ்ச்சியாக இருப்பவன் சட்டை போட்டு இருப்பான்.
அந்த சட்டையை போட்டுக் கொண்டால் தனக்கும் மகிழ்ச்சி வரும் என்ற அரசனின் நம்பிக்கை அந்த நிமிடத்தில் தவிடு பொடியானது.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு வசதி தேவையில்லை என்பதைப்போலவே, சட்டையும் தேவை இல்லை.

அவற்றில் எல்லாம் மகிழ்ச்சியை யாரும் கட்டி வைத்துக் கொள்ள முடியாது என்று அவனுக்கு அப்போதுதான் புரிந்தது..

ஆம் நண்பர்களே...

மகிழ்ச்சி என்பது வேறு எங்கும் இல்லை. நம்மிடம்தான் இருக்கிறது..

உங்கள் வாழ்வின் மிக அழகான கணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு இருந்த கணங்கள் அல்ல.

நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கணங்களே..
ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்போம்.🌺🙏🏻💐