Thursday 17 November 2016

பாசிட்டிவ் எனர்ஜி

*💐பாசிட்டிவ் எனர்ஜி🌺*

உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். *’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.*

*வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும்போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது,*

*சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள்தான்*.

*நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.*

பாசிட்டிவ் எனர்ஜியின் *பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி.* ’அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது. *ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது*. *தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது?*

*மனிதனின் சிந்தனை அறைதான்*

. *இரு சக்திகளும் ஒரே அறையில்தான் வித்தாக விழ்கிறது.*

அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

*மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான்.* இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலிதான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.
இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார்.

*இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர். *எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும்.*

*நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும்.*

*எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்*.

*கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.*

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், *சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர்.*

*இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும்.* *ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும்*.

எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் *ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.*

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும். *உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக்கொள்வோம்*. *திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது.*

அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய *நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும்*. அவர் என்ன செய்வார் அவருக்குச் *சாதகமான இடத்தில் வெளியிடுவார்.* இப்படியாக இது பரவும்.
*ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும்,* அல்லது பலனளிக்கும்*
*மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது*
இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

*நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு. ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும்போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். *ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத்தானே திரும்பவும் கிடைக்கும்.*

அதற்காக அப்படி நடந்துகொள்வாராம் அம்மனிதர்.
*சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது.* *அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே வாழும் வீட்டில் சமூகத்தில்,நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்..*.

Saturday 12 November 2016

ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம

💥💥💥🙏🙏🙏

ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் விளக்கத்துடன்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றி எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள்,  எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று அறிவித்தாலும், எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய். அவ்விதமே ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாதம் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சேதாநாரூபீ, சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் ராஜ ராஜேஸ்வரி என்று கூறி முடிகிறது உண்மையில் எல்லா ஸ்லோகங்களும் பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே.

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி,காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ,  பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள். இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள்.

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இத்தாயே-மோஹிநீ தேவதை, மூவுல காளி, பேரானந்தம் தருபவள், சரஸ்வதி, இளந்தளிர் கைகள் கொண்டவள், புல்லாங்குழல் இசையை  பிரியத்துடன் இசைத்து விளையாடுபவள். மங்களமானவள், சந்த்ர பிம்பம் போல் முகம் உள்ளவள். தூம்பராக்ஷனை வதம் செய்தவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆவாள்

3. அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ
ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா
வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள். வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷõயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் ரௌத்ரிணீ, பத்ரகாளி, தீக்கொழுந்து எரியும் முகம் உள்ள பகலா, வைஷ்ணவி, ப்ரஹ்மாணீ தீரிபுராந்தகீ, தேவர்களால் வணங்கப் பெறுபவள், பளபளக்கும் ஒளிபடைத்தவள், சாமுண்டா, அண்டினவர்களை காப்பாற்றுபவள், அவர்களுக்கு பூஷ்டி அளிக்கும் தாய், தாக்ஷõயணீ, வல்லமை பொருந்தியவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்

5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயாவனள் சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவைகளைத் தன் திருக்கைகளில் தரித்தவளாயும், தலையில் அர்த்த சந்த்ரனை உடையவளாகவும் இருப்பவள். வாராஹீ, மதுகைடபர்களை அழித்தவள். சரஸ்வதி, லக்ஷ்மீ இவர்களாலும் துதிக்கப் பெற்றவள், மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவள். மாஹேச்வரீ, அம்பிகா, இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் ஸ்ருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்பவள் உயர்ந்தவளாக விளங்குபவள். காயத்ரீ, ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவைகளின் அம்ருதரஸமானவள், ஓங்காரஸ்வரூபிணீ தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவள், அசுரர்களைக் கொல்வதில் முனைப்பாக இருப்பவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் அழியாத தேவங்களால் போற்றப்பட்டவள். உயர்ந்த மஹாதேவதை, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகந்மாதா ஆவாள். சகல ஜகத்தையும் மோஹிப்பிப் பவள். பஞ்சப்ரணவாதிகளை உண்டாக்குபவள், ÷ரபம் எனும் அக்ஷரத்துக்கு மூலமானவள் சித்கலா, மாலினி என்ற பெயர்கள் உடையவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

8. அம்பா-பாலித-பக்தராஜ-தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா-லோக-கடாக்ஷ வீ÷க்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன-மந்த்ர-ராஜ-படனா தந்தே ச மோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவள். இவளைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தை எவன் படிக்கிறானோ அவன் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான்.மேலும் அம்பாளின் இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு மோக்ஷமளிப்பாள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

இந்த ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் பெருமை எட்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லப்படுகிறது என்பது விசேஷம். எட்டு ஸ்லோகங்கள் உள்ளதால் அஷ்டகம் எனப்படும் அருமருந்தாகிறது.