Monday 11 February 2019

குழப்பம்

ஒருவன் என்னிடம் வந்து "நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். நிம்மதியடைய எனக்கு வழி காட்டுங்கள்" என்று எனது கால்களில் விழுந்தான்.

நான், "எனது காலை விடு. உன்னுடைய நிம்மதிக்கும் என்னுடைய காலுக்கும் என்ன சம்மந்தம்? யாரும் கேள்விப்பட்டதே இல்லை. எவ்வளவு நேரம் என் கால்களில் விழுந்து கிடந்தாலும் அங்கே நீ நிம்மதியைக் காணப் போவதில்லை. என்னுடைய கால்கள் உனக்கு என்ன தீங்கு செய்தன? உன்னுடைய இந்த நிலைக்கு என்னுடைய கால்களைக் குற்றம் சொல்லக்கூடாது. நீ குழப்பத்தில் இருப்பதற்கு என்னுடைய கால்கள் காரணமா?" என்றேன்.

அவன் அதிர்ச்சியைடைந்தான். "இப்படித்தான் நீங்கள் பேசுவீர்களா? நான் ரிஷிகேஷ் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, அங்கிருந்து திருவண்ணாமலை சென்று ரமணர் ஆசிரமம் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, எங்கும் எனக்கு நிம்மதியில்லை. எல்லா இடத்திலும் ஆன்மீகம் என்ற பெயரில் போலியாக நடிக்கிறார்கள். ஒருவர் எனக்கு உங்களிடம் செல்லுமாறு கூறினார். எனவே நான் இங்கு வந்தேன்." என்றான்.

நான், "உடனே இங்கிருந்து சென்று விடு. இல்லாவிட்டால் நீ வெளியே சென்று இங்கும் உனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்று புரளி பரப்பிக் கொண்டிருப்பாய்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலில் நீ குழப்பமடைந்தபோது யாருடைய ஆசிரமத்திற்குச் சென்றாய்? குழப்பமடைவதற்கு எந்த குருவின் உதவியை நாடினாய்? நீ குழப்பமடைவதற்கு யார் உனக்கு பயிற்சி கொடுத்தார்கள்? என்னிடம் வந்தாயா? யாரிடம் சென்று "குருவே நான் குழப்பமடைய விரும்புகிறேன். எனக்கு வழி காட்டுங்கள்" என்று கேட்டாய்?

நீயே குழப்பமடைந்து கொண்டாய், அப்போது உனக்கு நீயே போதுமானதாய் இருந்தாய்! இப்போது நீ நிம்மதியடைய விரும்புகிறாய். இங்கே வந்து மற்றவர்களை குற்றம் சொல்கிறாய்.

நீ நிம்மதியடைய வில்லையென்றால் நான் தான் பொறுப்பா? நான் உன்னை குழப்பமடையச் செய்திருந்தால் அப்போது நான் பொறுப்பு. இதற்கு முன் வந்து என்னைக் கேட்டாயா?" என்றேன்.

அவன், "இல்லை, நான் உங்களைக் கேட்கவில்லை" என்றான்.

"பின் யாரிடம் சென்று கேட்டாய்?" என்றேன்.

"இல்லை, நான் யாரிடமும் செல்லவில்லை" என்று பதில் கூறினான்.

"அப்படியென்றால் நீ குழப்பமாக இருப்பதற்கு நீயே காரணம் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ குழப்பமடைய எது காரணம், எப்படி குழப்பமடைந்தாய் என கண்டுபிடிக்க முயற்சி செய். அதைச் செய்வதை நிறுத்து, நீ அமைதியடைவாய்" என்றேன்.

நிம்மதியடைய வழி ஏதுமில்லை. ஆனால் குழப்பமடைய வழிகள் உண்டு.

குழப்பம் தரக்கூடியதை செய்யாமல் இருந்தால் அவன் நிம்மதியாக இருப்பான்.

விடுதலையடைய வழி கிடையாது. ஆனால் சிக்கிக் கொள்ள ஆயிரம் வழிகள் உண்டு. அடிமையாக வழிமுறைகள் உண்டு. அதில் விழாமல் இருந்தால் அவன் சுதந்திரமாக இருப்பான்.

--ஓஷோ--

Saturday 9 February 2019

பிராத்தனை

*காலை எழுந்தவுடன் மனதில் இந்த வரிகளை சொல்லுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்கும்....!*

*எனது தேவைகளை நிறைவேற்ற கூடிய பணம் என்னிடம் நிறைய இருக்கிறது.*

*நான் தினமும் தியானம் செய்கிறேன்.*

*எனது எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.*

*என் நோய் எதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.*

*நான் எப்பொழுதும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.*

*பிரபஞ்சம் என் மீது அளவற்ற வளங்களை பொழிகிறது.*

*என் வாழ்க்கை மிக அழகானது*.

*எனது சக்தியின் அளவு எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்கிறது.*

*எனது எண்ணம்,வாக்கு & செயல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து இருக்கின்றன.*

*நான் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்கிறேன்.*

*என்னால் வாழ்வில் எதையும் சுலபமாக எதிர்கொள்ள முடியும்.*

*நான் எப்பொழுதும் நல்ல விஷயங்களையே நாடுகிறேன்.*

*என் இலட்சியங்கள் நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்.*

*நல்லவர்களை மட்டுமே என் வாழ்வில் ஈர்க்கிறேன்.*

*நான் வளமையான உணர்வுடன் வாழ்கிறேன்.*

*என்னைப் பற்றி சிறப்பாக உணர்கிறேன்.*

*என்னை நான் மதிக்கிறேன்.*

*எனக்குள் அமைதியை உணர்கிறேன்.*

*என் சமயோஜிதம் பிரமாதமாக உள்ளது*.

*பணம் ஒரு சக்தி நான் அதை ஈர்க்கிறேன்.*

*வாழ்வில் எனது பங்கை புரிந்து செயல்படுகிறேன்*.

*நான் மிகவும் சக்தி வாய்ந்த மனிதன்.*

*என் எண்ணங்கள் எப்பொழுதும் நான் விரும்பிய பாதையிலேயே செல்கின்றன.*

*அழகிய நிறங்களும் நல்ல சக்தியும் என் ஆராவை நிறைக்கின்றன.*

*என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.*

*என் இலட்சியங்கள் சுலபமாக நிறைவேறுகின்றன.*

*நான் நிகழ்காலத்தில் வாழ்கிறேன்.*

*வாழ்வில் எனக்கு கிடைத்த விஷயங்களுக்காக நான் நன்றி சொல்கிறேன்.*

*என் மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது.*

*நான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.*

*நான் பணத்தை ஒரு காந்தம் போல வசீகரிக்கிறேன்.*

*நான் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறேன்.*

*நான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.*

*எனது எண்ணங்களில் சுதந்திரத்தை உணர்கிறேன்.*

*என்னை நான் நேசிக்கிறேன்.*

*எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது.*

*எனக்குள் ஆனந்தமும் நிம்மதியும் உணர்கிறேன்.*

*நான் சாதிக்கப் பிறந்தவன்.*

*என் மனம் தெளிவாக இருக்கிறது.*

*என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.*

*வாழ்வில் நான் தாண்டி வரும் இடர்பாடுகள் எனக்கு மேலும் சக்தி அளிக்கின்றன.*

*அன்பை பெறவும் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.*

*எனது வாழ்வை சிறப்பாக்க இந்த பிரபஞ்சமே செயல்படுகிறது.*

*என் உடலும் மனமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.*

*என் மனம் அமைதியாக இருக்கும் பொழுது இலட்சியங்களை நிறைவேற்றுவது சுலபமாக இருக்கிறது.*

*தெய்வீக சக்தி எப்பொழுதும் என்னை சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.*

*என் ஆராவில் உள்ள நல்ல சக்தி அனைவரையும் சாந்தப்படுத்தி நிம்மதி அளிக்கிறது.*

*இந்த நொடி என்னுடையது. அதை நான் மதிப்புள்ளதாக மாற்றுகிறேன்*.

*என் உடல் கச்சிதமாகவும் மனம் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.*

*என் ஆழ்மனதின் சக்தியால் வாழ்வில் அற்புதங்களை உருவாக்குகிறேன்.*

*நான் எங்கு சென்றாலும் நல்ல சக்தியை பரவச்செய்கிறேன்.*

*எனக்கு எது நல்லதோ அதையே பிரபஞ்சம் தருகிறது.*

*என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருக்காகவும் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.*

*என் உடலில் பஞ்ச பூதங்களும் சம நிலையில் இருக்கின்றன.*

*என் வாழ்வில் சௌபாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன.*

Sunday 3 February 2019

ஆற்றல்

*Energy - ஆற்றல் (சக்தி)*
ஆற்றல், யாராலும் காணமுடியாத ஆனால் அனைவராலும் உணரக்கூடிய ஒன்று. அனைத்து படைப்புகளும் ஆற்றலில் இருந்து உருவானவை தான். நம் கண்களால் காணக்கூடிய அனைத்து உயிரினங்களும், அத்தனை படைப்புகளும், அத்தனை பொருட்களும், இயற்கையில் விளைந்திருக்கும் கடல், ஆறு, மலை, நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு, மற்றும் நம் கண்களால் காண முடியாத, உணர்வுகளாலும் உணர முடியாத, பல கோடி படைப்புகளும் அந்த ஆற்றலில் இருந்து உருவானவை தான்.

*"அனைத்துமே ஆற்றல்தான், அதுவே அனைத்துமாக இருக்கிறது. அது நீங்கள் தேடுகின்றவற்றின் அலைகளை இணைக்கிறது. உங்களால் மாற்ற முடியாது ஆனால் உண்மைகளை அடைய முடியும். வேறு வழிகள் கிடையாது. இது ஒரு தத்துவமில்லை, இது இயற்பியல் ஆகும்".* -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்த ஆற்றல் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பிராணன், ரெய்கி, கீ, சீ, பிரபஞ்ச சக்தி, வைட்டல் எனெர்ஜி, இறை ஆற்றல், குட்ரத், என ஒவ்வொரு மொழியிலும், சமுதாயத்திலும், நம்பிக்கையிலும், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றலை பெயர்களைக் கொண்டு வெவ்வேறான ஆற்றல் என்று நாம் கருதி கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை அனைத்துமே ஒன்றுதான்.

இந்த ஆற்றலுக்கு அடிப்படையில் பல தன்மைகள் உள்ளன. உலகுக்கு வெளியே வெளியில் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பதும் பராமரித்துக் கொண்டு இருப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரினங்களை இயக்கி கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இயற்கையை பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரில்லாத ஜடப் பொருட்களில் இயங்கிக் கொண்டிருந்தது ஒரு வகையான ஆற்றல்.

வாகனங்களை இயக்குவது, மின்சார சாதனங்களை இயக்குவது என இந்த ஆற்றல். இந்த பிரபஞ்சத்தின் எல்லா நிலைகளிலும் செயல் புரிகிறது. இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் முதல், ஒரு சிறு புல்லின் வளர்ச்சி வரையில். மழை பெய்வது முதல் சுனாமியை உருவாக்குவது வரையில் இந்த ஆற்றல் பல பரிமாணங்களை எடுக்கிறது.

*"இந்த பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய வேண்டுமென்றால், ஆற்றல், அலைகள், மற்றும் அதிர்வுகளை ஆராயுங்கள்" - நிகோலா டெஸ்லா*

ஒரே தண்ணீர், டீ, காபி, குளிர்பானம், மழை நீர், சாக்கடை நீர், கடல், ஆறு, குட்டை, என அதன் உபயோகத்துக்கும், தன்மைக்கும், ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கபடுவதைப் போல். இந்த ஆற்றலும் அதன் தன்மைக்கும் உபயோகத்துக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அனைத்துமே ஒன்றுதான்.

*ஆற்றலின் வித்தியாசங்கள்*
இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது ஒரே ஆற்றல்தான். ஆனால் அதன் முழு ஆற்றலையும் உபயோகத்தையும் சாதாரண மனிதனின் அறிவைக் கொண்டு புரிந்துக் கொள்ள முடியாது. இந்த ஆற்றல் நன்மையானதாகவும் தீமையானதாகவும் இரு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த பிரிவினை அதன் தன்மைகளை கொண்டு மட்டுமே பிரிக்கப் பட்டுள்ளது. அதன் குணத்தினால் அல்ல.

இந்த பிரிவினையானது மனிதனின் வலது கையையும் இடது கையையும் போன்றது. வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே உடலின் அங்கம்தான் அவை. ஒரே நெருப்பை சமைப்பதற்கும் வீட்டை கொழுத்துவதற்கும் பயன்படுத்துவதை போல. அது நெருப்பின் தவறல்ல, அதை தவறாக பயன்படுத்தும் மனிதர்களின் தவறு. இந்த ஆற்றல் இடத்துக்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், நோக்கத்துக்கும், ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்ள கூடியது.

*இந்த ஆற்றல் நன்மையான நோக்கத்துடன் பயன் படுத்தும் போது நல்ல விளைவுகளையும், தீய நோக்கத்துடன் பயன்படுத்தும் போது தீய விளைவுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களுக்கு வறுமை, நோய், துன்பம் போன்றவை உருவாக காரணமாக இருப்பதும். அவை நீங்கி செல்வ செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை உருவாக காரணமாக இருப்பதும் இதே ஆற்றல்தான். மனிதர்களை பேயாக ஆட்டிப்படைப்பதும், அந்த பேயை விரட்டுவதும் ஒரே ஆற்றல் தான். அதனால்தான் பெரியவர்கள் நடப்பது நல்லதோ கெட்டதோ  எல்லாம் அவன் செயல் என்று கூறுகிறார்கள்.*

*நல்ல ஆற்றலின் விளைவுகள்*
ஆரோக்கியம்
மன அமைதி
சுறுசுறுப்பு
மகிழ்ச்சி
புத்தி கூர்மை
நல்ல உறவுகள்

*தீய ஆற்றலின் விளைவுகள்*
நோய் நொடிகள்
பதட்டம்
கவலை
வறுமை
முட்டால் தனம்
தீய உறவுகள்

👑

கதை

*குட்டி கதை - கனவு*

ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.

இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான்.

அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம்விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார்.

இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைத்தான் சொன்னார்கள்.

ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.! நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர எந்த வித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*வாழ்க வளமுடன்.......*