Sunday 25 April 2021

பயம்


............................................................
*"பயம்...! பயம்...! பயம்...!"*
..............................................
நம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...!

இரண்டு விதத்தில் பயம் ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் மறைந்து விடும் தற்காலிக பயம்...

எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக இருப்பவர்கள். அதுவே அவரை மனநலம் குன்றியவராக ஆக்கிவிடும்...

சிறுவயதில், நம்மை அடக்க அல்லது கீழ்ப்படிய வைக்க “பூச்சாண்டி’ காட்டுவது நடைமுறை வழக்கம் என்றாலும், அதுவும் ஒருவகையில் மனதளவில் நம்மை பாதிக்க வைக்கும் செயல்தான்...

பெரியவர்களான பிறகு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் அடிப்படைக் காரணமே அதுதான். இது வளர வளர பின்னாளில் மனோவியாதியாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு...

பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் .அது போல துணிச்சலுடன் எதிர்கொண்டால் பயத்தையும் வெல்லலாம்...

மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது உறுதி...

பய உணர்வு ஏற்படும் நேரங்களில், பயம் நீங்கி தைரியம் பெறும் வகையில் மனத்தில் ஓடும் எண்ணத்தையும், சுற்றுப் புற சூழ்நிலைகளையும் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்...

*ஆம் நண்பர்களே...!*

*பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்...!*

*கவலையும், அச்சமும்தான் ஒரு மனிதனை முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!!*

*மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்...!!!*

Thursday 8 April 2021

பதவி

*பெற்றோர்களை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக இருக்கும் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களை கண்டுகொள்வது இல்லை.*

*பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.*

*இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி...அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு போனார். "பாதுகாப்பு எல்லாம் கொடுக்கமுடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" என கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன்கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை...*

*ஒரு பழமொழி உன்டு..'கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும்கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்" என. அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை?* 

*நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.*

*#செவன்_சாமுராய்....அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.*

*ஒரு விவசாய கிராமம்...அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிரார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.*

*போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள்...விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உணவை கட்டிக்கொன்டு வயலுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்புவாழ்க்கைக்கு மீண்டும் சென்றுவிடுகிறார்கள்.*

*தம் தேவை அவர்களுக்கு முடிந்தது என தெரிந்துகொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்....*

*#இதுதான்_உலகம்.*

*நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.*

*இதனை உணந்தால் நமக்கு பின்னாளில் அதிர்ச்சிகள் என்பது இருக்காது.*

*#வாழ்த்துக்கள்.*

*#வாழ்க_வளமுடன்.*