Thursday 30 March 2017

மணல்

❤ தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு சின்னப் பெட்டி.

மாணவர்களின் சத்தம் அடங்கியதும் பேராசியர் அந்தப் பெட்டியைத் திறந்தார். ஒரு பையனை அழைத்தார். ‘இது என்ன? தெரிகிறதா?’

‘மணல்!’

‘உன்னால இதைக் கையில அள்ளமுடியுமா?’

’ஓ, முடியுமே!’ அவன் கை நிறைய மணலை அள்ளிக் காண்பித்தான். மீண்டும் அதைப் பெட்டியிலேயே போட்டான்.

’இப்போ நீ இந்த மணலைக் கையில எடுத்து அழுத்திப் பிடிச்சுக்கோ’ என்றார் பேராசிரியர். ‘ஒரு சின்னத் துளிகூடக் கீழே சிந்தக்கூடாது.’

அந்த இளைஞன் முகத்தில் லேசான பதற்றம். கைப்பிடி மணலை அள்ளி எடுத்து அழுத்தினான். அது அவனது விரல்களுக்கு நடுவே வழிந்து சிதறியது. எல்லோரும் சிரித்தார்கள்.

‘கவலைப்படாதே. மறுபடி முயற்சி பண்ணு!’ என்றார் பேராசிரியர். ‘இந்தமுறை இன்னும் நல்லா அழுத்திப் பாரு’ என்று ஊக்குவித்தார்.

இளைஞன் மீண்டும் மண்ணை அள்ளினான். அதை அழுத்திப் பிடிக்க முயன்றான். அது இன்னும் வேகமாகச் சிதறியது.

இப்போது பேராசிரியர் இன்னொரு மாணவியை அழைத்தார். ‘நீ இந்த மண்ணைக் கீழே சிந்தாம கையில வெச்சிருக்கணும்ன்னா என்ன செய்வே?’

’அழுத்தாம லேசாப் பிடிச்சுக்குவேன் ப்ரொஃபஸர்’ என்றாள் அவள். ‘ஏன்னா நான் அழுத்த அழுத்த மணல் இன்னும் வேகமா வெளியே போகுது!’

‘எக்ஸாக்ட்லி’ என்று புன்னகை செய்தார் ப்ரொஃபஸர். ‘ஜென் வாழ்க்கையோட ஒரு முக்கியமான கோட்பாடு இது. நீங்க ஒரு நெகட்டிவ் விஷயத்தை நினைச்சு மேலும் மேலும் கவலைப்படறபோது உங்களையும் அறியாம அதுக்குக் கூடுதல் ஆற்றலைக் கொடுத்துடறீங்க. அது நிஜமாவே நடந்துடறதுக்கான சாத்தியங்களை அதிகப்படுத்திடறீங்க!’

’அதுக்குப் பதிலா மணலை அழுத்தாம பிடிக்கப் பழகுங்க. எதையும் ரிலாக்ஸா அணுகத் தெரிஞ்சுகிட்டோம்ன்னா எந்தக் கவலையும் பெரிய சுமையாத் தோணாது. எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் சுலபமா சந்திச்சுச் சரி பண்ணிடலாம்!’❤🏃🏼🏃🏼🏃🏼🏃🏼🏃🏼

Wednesday 29 March 2017

இறை நிலை

சூஃபி மகான்
இறை நிலை
விளக்கம்,,,,

சூஃபி மகான் ஒருவர் தனக்காக ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்.

அன்றாட தேவைகளை அவன் கவனித்துக் கொண்டால் தாம் இறைவழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தால்.

அடிமையை வாங்கிக் கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார்.

அந்த அடிமையின் பணிவும் மாரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்து போயிற்று.

மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தார்.

உன்னுடைய பெயரென்ன?

நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது " என்றான் அடிமை.

நீ என்ன வேலை செய்வாய்?

தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை" என்றான் அவன்.

நீ என்ன சாப்பிடுவாய்?

தாங்கள் என்ன தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்"

உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?

எஜமானர் இருக்கும் போது அடிமைக்கு என்று ஒத ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்" என்றான் அடிமை.

அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் சூஃபி மகானுக்கு அழுகையே வந்து விட்டது.

தனக்கும் இறைவனுக்கும் இருக்க வேண்டிய தொடர்பை எந்த அளவுக்கு மேன்மையாக விளக்கி விட்டான் இந்த அடிமை.

அன்பரே,, இறைவனுடன் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்று கொடுத்து விட்டீர்கள்

இனி நீங்கள் அடிமை இல்லை. உங்கனை நான் விடுதலை செய்து விட்டேன்." என்று கூறி அடிமையை அனுப்பி வைத்துவிட்டார் சூஃபி அவர்கள்.

மகிழ்ச்சி

😅 ஓஷோ ஜோக்ஸ் 😅

🐤 ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள்.

ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள்

அதற்க்காக அவள் அதிக விலை கொடுத்திருந்தாள்.

கிளி அழகாக இருந்தது.

ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க,

“ நீ ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.

இதில் ஏதோ விஷயம் இருக்கிறது .

அந்தப் பெண் தனியாக வாழ்பவள்.

மிகவும் மதப்பற்றுள்ளவள்.

இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்.....???

அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நீ மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறியது.

அவள் பூசாரியிடம் சென்று

“ இந்த கிளி மிகவும் திட்டுகிறது .. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன்.

கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன,

இதன் பேச்சை தவிர ” என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளைகள் இருக்கின்றன.

ஒன்று வழிபாடு செய்யும் ;

மற்றொன்று மணியடிக்கும்

நீ உன் கிளியைக் கொண்டு வா,

இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல்.

நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும்.

பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.

அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் .

பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார்.

ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்தக் கிளி கூறியது . “ நீ மிகவும் கொடுமைக்காரப் பெண் .”

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி

வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம்

” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ?

நம் பிராத்தனைகள் நறைவேறி விட்டன “

என்று கூறியது .

அவை தங்களுக்கு ஒரு ஜோடி பெண் கிளி கிடைக்க வேண்டும் பிராத்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

"யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால்

ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு.

அவர்கள் பண்த்துக்காக,

பெண்ணுக்காக,

மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை.

மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு ,

அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது" 🐤

🐥 ஓஷோ 🐥

Tuesday 28 March 2017

கோபம்

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார்,

நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால்,
அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.

மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்.

அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார்.

இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார்.

வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார்.

இப்படி ஒவ்வொருவரும்
தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு,
அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர்.

கோபம்னா என்ன?

கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம்.
அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால்

நட்பு நசுங்கி விடும்.
உறவு அறுந்து போகும்.
உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன?
சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க.

கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது.
இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது.
இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது.

இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால்
ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இதெல்லாம் நீங்க சொன்னீங்க... உண்மை மாதிரி தான் தெரியுதுன்னு நீங்க சொல்றதும். அப்படியே கோபத்தை குறைக்கறதுக்கும் வழி சொன்னீங்கன்னா நல்லாயிருக்குமேன்னு புலம்புறதும் புரியுது...

அப்படி வாங்க வழிக்கு.
அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம்.
முதல்ல  அடுத்தவங்களுக்கு

கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க.
அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க.
எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க.
அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்க.

நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே.

முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க.
யார்மேல தவறுன்னு சிந்தியுங்க...
கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும்.

அப்படி இல்லைன்னா

அந்த இடத்தை விட்டு நகருங்க...
தனியா உக்காந்து யோசிங்க.
அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள்.
அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.
அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம்.
என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம்.
மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு.
அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது.
எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க.

வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள்
என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு.

நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே,
நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான்.
தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட.
ஒரு செகண்ட் யோசிச்சான்னா தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.
இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம் வரவே வராது.
நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.
கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான்.
வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

Tuesday 21 March 2017

ஜென்

🌷 ஜென் தனி மனித விழிப்புணர்வையே வலியுறுத்துகிறது

நாம் ஒரே பயிற்சியை திரும்பத் திரும்ப செய்யும்போது அது

பழக்கமாகி இயந்திரத் தன்மையாகி விடுகிறது

அதில் பிறகு எந்த விழிப்புணர்வும் இருக்காது

பிரபஞ்ச மனம் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இயங்கக் கூடியது

உங்கள் மனதை ஒன்றுமற்றதாக ஆக்குங்கள்

பிரபஞ்ச மனம் ஆகுங்கள் ஞானம் பெறுங்கள்

பிரபஞ்ச மனத்தில் காலம் இடம் மறைந்து விடுகின்றன

பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு பயத்தின் வெளிப்பாடு அல்ல

நமது முகம் அன்பால் மகிழ்ச்சியாக மலர்ந்து இருக்கட்டும்

கருணையோடு காதலோடு இருக்கட்டும்

எந்த வித பயமோ குற்ற உணர்வோ இருக்க வேண்டாம்

கடவுளைப் பற்றிய பலவகை எண்ணங்களே கடவுளை அடைய தடையாய் உள்ளன

பிரபஞ்ச மனம் தன்னறிவாய் தன்னுணர்வாய் செயல் படுகிறது

சூன்யம்தான் உருவமாகி வந்துள்ளது

உருவம் திரும்பவும் சூன்யம் ஆகும்

உடல் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இருக்கும்

மனம்தான் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர் காலத்திலேயோ இருக்கும்

மனத்தை நிகழ் காலத்தில் வைக்கும் பயிற்சிதான் ஜென் 🌷

🌷ஓஷோ
ஜென்🌷

Sunday 19 March 2017

தியானம்

தியானம் மிகவும் எளிமையானது.

படுக்கையில் உட்காருங்கள், உடலை தளர்த்திக் கொள்ளுங்கள், கண்களை மூடுங்கள். நீங்கள் ஒரு மலைப்பகுதியில் தொலைந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அது கருமையான நள்ளிரவு, வானத்தில் நிலவில்லை; மேகமூட்டத்துடனான வானம். ஒரு நட்சத்திரத்தைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லை. முழுஇருள். உங்கள் கைகளைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லை. நீங்கள் மலைப்பகுதியில் தொலைந்து விட்டீர்கள். வழி தெரியாமல் கஷ்டப்படுகிறீர்கள்.

அங்கே ஒரு ஆபத்திருக்கிறது, எந்த நிமிடமும் நீங்கள் ஏதோ ஒரு பள்ளத்தாக்கில் விழலாம். எங்கோ படுபாதாளத்தில் வீழ்ந்துவிடலாம். நீங்கள் காணாமலேயே போய்விடலாம். நீங்கள் எச்சரிக்கையாக அடியெடுத்து வைக்கிறீர்கள்.

பெரும் ஆபத்திருப்பதால் நீங்கள் மிகுந்த உஷாராக இருக்கிறீர்கள். ஆபத்து அதிகமாக இருக்கும்போது ஒருவர் எச்சரிக்கையாகதானே இருப்பார்.
மிகவும் இருளானஇரவு, மலைப்பகுதி என்று கற்பனை செய்து கொள்வது ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிக் கொள்ளத்தான்.  நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கிறீர்கள். ஒரு ஊசி கீழே விழுந்தால்கூட உங்களால் கேட்க முடியும். பிறகு திடீரென்று செங்குத்தான ஒரு பகுதிக்கு வருகிறீர்கள். அதற்குமேல் போகமுடியாது என்று தெரிகிறது மேலும் அந்த பள்ளத்தாக்கு எத்தனை ஆழமானது என்பதும் தெரியாது. அதனால் நீங்கள் ஒரு கல்லை எடுத்து அந்த பள்ளம் எத்தனை ஆழமானது என்பதை தெரிந்துகொள்ள எறிகிறீர்கள்.

இப்போது அந்த கல் எந்த கல்மீது மோதி சத்தம் ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள காத்திருங்கள். அந்தசத்தம் வருகிறதா என்று கவனியுங்கள், கவனியுங்கள் கவனித்துக் கொண்டேயிருங்கள். ஆனால் எந்த தகவலும் இல்லை, ஏதோ அந்தபள்ளத்தாக்கிற்கு கீழ்ப்பகுதியே இல்லாததைப்போல. நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்கையில் ஒரு பெரும்பீதி உங்களுக்குள் பரவுகிறது.

அந்தபீதி இப்போது உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைப்போல ஒரு விழிப்பை ஏற்படுத்துகிறது.
அது உண்மையில் உங்கள் கற்பனையாகவே இருக்கட்டும். நீங்கள் கல்லை எறிந்துவிட்டு காத்திருங்கள்.  நீங்கள் பொறுமையாக காத்திருந்து கவனியுங்கள். மார்பு துடிக்க நீங்கள் காத்திருங்கள், ஆனால் சத்தமில்லை. அங்கே ஒரு ஆழ்ந்தமெளனம்.

அந்த மௌனத்தில் நீங்கள் தூங்க ஆரம்பியுங்கள். அந்த சத்தமில்லாத மெளனத்தில் நீங்கள் ஆழ்ந்ததூக்கத்திற்கு போகிறீர்கள்.

-osho

Saturday 18 March 2017

பைத்தியக்கார ஏமாளி

ஒரு தேநீர் கடையில் நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவன் கூறினான். "நேற்று இரவு நான் தியானித்துக் கொண்டிருந்த போது ஒரு தேவதை என் முன் தோன்றியது.ஒரு புதிய தீர்க்கதரிசியாக கடவுளால் நீ தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாய்." என்று கூறியது.

அவர்களுள் ஒருவன் கூறினான். "உன்னையா? ஏன்? "

அந்த மனிதன் கூறினான். "இந்தக் கேள்வியை நானும் அந்தத் தேவதையிடம் கேட்டேன். என்னையா,ஏன்?" அந்த தேவதை பதிலளித்தது, "ஏனென்றால் உன்னைவிட ஒரு பைத்தியக்கார ஏமாளி வேறு யாரும் இல்லை."

எந்தக் குரலையும் நம்பாதீர்கள். யதார்த்தமாக தனித்திருங்கள். யதார்த்தமாகக் கவனியுங்கள். அப்போது அவை மறைந்து விடும்-ஏனென்றால் அவற்றிற்கு நீங்கள் செவிசாய்த்து நடந்து கொள்ளாவிட்டால் அவற்றின் உற்சாகம் போய்விடும்.

எல்லாவித குரல்களும் சென்றுவிடும் போது அங்கே ஓர் அலாதி மௌனம் தங்கி இருக்கும்.

அந்த மௌனம் தான் கடவுளின் குரல்.

நினைவில் கொள்ளுங்கள், மௌனத்தைத் தவிர வேறு எந்த விதமான குரலும் கடவுளிடம் இல்லை.

அவர் எதுவும் சொல்வதில்லை. சொல்வதற்கு அங்கு எதுவும் இல்லை;வார்த்தை ரீதியான தொடர்பு அங்கு இல்லை.

ஆனால் அந்த மௌனம், ஆழ்ந்த மௌனம் உங்களுக்குத் தெளிவைத் தருகிறது, உங்களுக்கு ஒளியைத் தருகிறது,சரியான பாதையை உங்களுக்கு வழிகாட்டுகிறது.

அதாவது, இந்த திசையில் செல் என்று அது சுட்டிக் காட்டுவதில்லை. எல்லாவிதமான வரைபடத்தையும் அது தருவதில்லை. எந்த வழிகாட்டியையும் அது அளிப்பதில்லை, அது போன்ற விஷயங்கள் எதையுமே செய்வதில்லை;

அது வெறுமனே உங்கள் பாதையைப் பார்ப்பதற்கான கண்களைத் தருகிறது அவ்வளவுதான். அதன் பிறகு கண்களுடன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் நடக்கத் தொடங்குகிறீர்கள்.

வழக்கமாக நீங்கள் ஒரு குருடனாகத்தான் நடக்கிறீர்கள். ஒரு குருடனுக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள், ஒரு குருடனுக்கு குரல்கள் தேவைப்படுகின்றன.ஒரு குருடனுக்கு வரைபடங்கள் தேவைப்படுகின்றன.

ஆனால் கண்கள் கொண்டுள்ள மனிதனுக்கு எவையும் தேவையில்லை.

--ஓஷோ--

Friday 17 March 2017

சூரிய வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்?

ஒரு நாளை எப்படி தொடங்க வேண்டும்? சூரிய வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்? ஓஷோ கூறும் வழிமுறைகளை இங்கே பார்ப்போமா? 


அதிகாலையில் எழுந்து, குளித்து சூரிய உதயத்திற்காக காத்திருங்கள். சூரிய உதயத்தின் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தைகளை சொல்லுங்கள். எதுவும் தோன்றவில்லையா? அமைதியாக சூரிய உதய அழகை ரசித்திடுங்கள்.

சுலோகங்கள், பக்திப்பாடல்கள் மட்டுமே சொல்லவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவுமில்லை. அக்கணத்தில் உங்களுள் தோன்றுவதைச் செய்திடுங்கள். அது சகமனிதனுக்கு சொல்லும் காலை வணக்கமோ, கைகூப்பி வணங்குவதோ, கீழே அமர்ந்து நிலத்தைத் தொடுவதோ, ஆடுவதோ, பாடுவதோ, சூரியனுடன் உறையாடுவதோ அல்லது சூரியன் சொல்வதைக் கேட்பதோ, இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படிச் செய்யவேண்டும், அப்படிச் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடாதீர்கள். அவ்வாறு செய்வதால் அக்கணத்தில் தோன்றக்கூடிய புதிய எண்ணங்கள் தடைபடலாம்.

இவ்வாறு தினமும் செய்வதால் உங்களுள்ளே மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திடக் காண்பீர்கள். ஒவ்வொரு நாளும் உற்சாகமளிக்கக் கூடிய பல வகையான எண்ணங்கள் உங்களுள்ளே தோன்றிடக் காண்பீர்கள்.

மேலும், நாள் முழுவதும் புத்துணர்ச்சிமிக்க மனநிலையைப் பெறுவீர்கள். ஒவ்வொரு நொடியும் வாழப் பழகுவீர்கள். அடுத்த நாள் விடியலை ஆர்வமுடன் எதிர்கொள்ளத் தொடங்குவீர்கள்.

பறவைகளின் இனிமையான அறைகூவல்கள், சூரிய உதயத்தின் போது நிகழும் வண்ணக்கோலங்கள், கூட்டமாக பறக்கும் பறவைகள், இதுபோன்ற அற்புதமான சிறு சிறு இன்பங்களை அனுபவிப்பீர்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் இப்பயிற்சி தரும்

Wednesday 15 March 2017

எதிர்பார்ப்பு

ஒரு அடியாரின் உணர்வு பகிர்வு..,

*எதிர்பார்ப்பு*

ஏதாவது ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அதற்கான விளைவு நமது மனம் விரும்பிய வாறு, இப்படித் தான் வர வேண்டும் என எண்ணிக் கொண்டு, மனதில் ஒரு பற்றுடன், அந்த செயலை செய்வது தான் எதிர்பார்ப்பு.

அவ்வாறு எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்து, விளைவு நம் மனம் விரும்பியவாறு வரவில்லை என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

இத்தகைய ஏமாற்றமே நம் மனதில் கோபம், வஞ்சம், கவலை போன்ற மிகப் பெரிய தாக்கங்கள் ஏற்படக் காரணமாகிறது. இதனால் மனதிலும் உடலிலும் ஆரோக்கிய குறைபாடு தான் உருவாகும்.

எதிர்பார்ப்பினால் நமக்கு நன்மை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதனால் எதிலும் பற்று கொண்டு செயலாற்றி, எதிர்பார்ப்பினை வைக்காமல், அதற்கு பதிலாக எதிர்காலத்திற்கான குறிக்கோள் மற்றும் திட்டங்களை மட்டும் வகுத்து வைத்து விட்டு, பிறகு செயலில் ஈடுபடும் போது தன்னம்பிக்கையுடனும் முழு ஈடுபாட்டுடனும் நமது கடமைகளை கவனமுடன் செய்து வருவதே மிகவும் சிறந்தது.

*கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே* என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜூனருக்கு எடுத்துரைப்பதைப் போல, செய்யும் செயலில் பற்று வைக்காமல் வாழ்வோமானால் வாழ்வில் எப்போதும் இன்பம் மட்டுமே இருக்கும்.

*ஏற்புத் திறன்* (Acceptance)

ஒரு செயல் நல்ல படியாக நடக்க வேண்டும் என சங்கல்பம் செய்வது சரி தான். ஆனால் விளைவு வரும் போது அது எத்தகையதாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

இயற்கையின் செயல்விளைவுத் தத்துவத்தைப் புரிந்து கொண்டால் இது மிகவும் எளிது. அதாவது நாம் செய்யும் *செயலில் மட்டுமே நமக்கு உரிமை உள்ளது, விளைவில் இல்லை*.
அது நம் தகுதிக்கும் செயலுக்கும் ஏற்ப காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் நிச்சயமாக ஒரு விளைவு உண்டு.

*உதாரணம்*

ஒருவர் காய்கறிக்கடை வைக்கிறார் என்றால், தொழில் நல்லபடியாக நடந்து எல்லாமே விற்றுவிட வேண்டும் என்று தான் அவரது எண்ணம் இருக்க வேண்டும். ஆனால் என்றாவது ஒரு நாள் சரியாக விற்க வில்லை என்றால் அதனையும் அவர் ஏற்றுக் கொள்வது தான் அவருக்கு நல்லது.

இங்கு ஏற்றுக் கொள்வது என்றால், எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது என்று பொருளாகாது.

நடந்து முடிந்த விளைவை ஒப்புக் கொண்டு, *இதிலிருந்து நமக்கு என்ன தெளிவு ஏற்பட்டது*....
இனி வியாபாரம் சிறப்பாக நடைபெற நாம் *நமது செயலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என சிந்தித்து உணர்வதே ஒருவருக்கு வாழ்வில் வளர்ச்சியைக் கொடுக்கும்*

வாய்ப்பிற்கு நன்றி
வாழ்க அன்புடன்!