Tuesday 25 June 2019

Done

சாய்வதற்கு ஒரு தோள் அவசியமா...?

இன்றைக்கு எல்லோருக்கும் உள்ள ஓர் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா...?

சாய்ந்துகொள்ள ஒரு தோள்.

ஆம்... தன்னைத் தாங்கிப் பிடிக்க ஒருவர் இருந்தால் நல்லது என்றே பலரும் ஆசைப்படுகிறார்கள். இது ஒருவகை மனநோய். மன ஊனம்.

உண்மையில் உடல் ஊனமுற்ற பலர்கூட இந்த எதிர்பார்ப்பிலிருந்து விலகிச் சுயமாக இயங்கவே விரும்புகிறார்கள்.

ஆனால் கையும் காலும் வலுவாக இருந்தாலும், மனது பலவீனம் அடைந்த சிலர் யாரையாவது சார்ந்து வாழவே விரும்புகிறார்கள்.

இந்தப் பலவீனத்தைத்தான் சிறுசிறு ஜோதிடர்கள், சின்னச் சின்ன சாமியார்கள் வசமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மூளையை அடகு வைத்துவிட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பிறர் வசம் விட்டவர்கள் வாழ்வில் மிகப் பெரிய நிலையை ஒருபோதும் எய்த முடியாது.

புத்தர், உலகை உலுக்கிய மனிதருள் ஒருவர். அவர் யாரைக் கேட்டுத் துறவு பூண்டார்......???

சகல உயிர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் கருணாமூர்த்தி அவர். ஆனால் அவர் ஆறுதலுக்காகச் சாய்ந்து கொள்ள ஒரு தோள் கேட்கவில்லை.

கோயிலில் உள்ள சாமிகளுக்குப் பேரும் புகழும் எதனால் தெரியுமா......???

பெருவாரியான மனிதர்களின் புலம்பலை, பிலாக்கணத்தை மறுப்புச் சொல்லாமல் கேட்டுக் கொள்வதுதான்.

எதிர்த்துப் பேசாமல், எவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பதுதான் கடவுளின் ஸ்பெஷாலிட்டி.

அதனால்தான் அவருக்கு இவ்வளவு பாப்புலாரிட்டி.

அதாவது பலரது எதிர்பார்ப்பான சாய்ந்து கொள்ள ஒரு தோள் என்கிற ஆசையே கோயில்களின் எண்ணிக்கையைக் கூட்டிவிட்டது.

எப்போதும் சிலர் தங்களின் உறவுக்காரர்களில் ஒரு சிலர் பெயர் சொல்லி, ""அவர் என்னைக் கைதூக்கிவிட்டிருக்கலாம்... ஆனால் மனுஷர்..... செய்யமாட்டார்'' என்று திட்டுவார்கள்.

என் நண்பர் ஒருவர் உண்டு. எப்போதும் யாராவது இன்னொரு நண்பர் பெயர் சொல்லி, ""அவனுக்கு இப்பதான் போனஸ் வந்துருக்கு. எனக்கு ஐயாயிரம்தான் தேவை... கொடுக்கலாம். மனசே கிடையாது'' என்பார்.

ஆனால் பிறரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்.

இத்தகைய மன ஊனங்கள் மாறவேண்டியவை.

ஓர் ஏழை இளைஞன் நெடுநாள்கள் ஆசைப்பட்டு விலையுயர்ந்த ஒரு ஜோடிக் காலணிகள் வாங்கியிருந்தான்.

ஓடும் ரயிலில் அட்டைப் பெட்டியைத் திறந்து அவற்றின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜோடியில் ஒன்று ஜன்னல் வழியாகத் தவறி வெளியே விழுந்தது.

ஒரு விநாடி அவன் முகத்தில் வருத்தம் தோன்றியது. அடுத்த விநாடியே மற்றொன்றையும் பெருமிதத்துடன் வெளியே வீசினான்.

உடன் இருந்தவர்கள், "என்ன தம்பி இப்படிச் செய்துவிட்டீர்கள்?'' என்றனர்.

"ஐயா... காலணியில் ஒன்றை மட்டும் நான் வைத்திருந்தால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை.

ரயில் தண்டவாளம் அருகே மற்றொன்றை யாராவது கண்டால் அவர்களுக்கும் பயன் இல்லை. மற்றொன்றை வீசிவிட்டால் எடுக்கிறவராவது சந்தோஷப்படட்டும் என்றுதான் வீசினேன்'' என்றான்.

தன் துயரத்தை இறக்கிவைக்கத் தோள் தேடும் பலவீனம் அவனிடம் இல்லை.

பிறர் துயரம் தீர்க்கும் பெருந்தன்மைப் பலம் அவனிடம் இருந்தது. அதனால்தான் ஊர் பேர் தெரியாத அந்த இளைஞனைப் பற்றி லட்சக்கணக்கானோர் படிக்கும் இந்தப் பத்திரிகையில் இன்று நான் எழுதுகிறேன்.

எப்போதும் ஏதாவது ஒரு துக்கத்தை, துயரத்தை மூட்டைகட்டி வைத்துக்கொண்டு யாராவது அகப்படமாட்டார்களா,

அவர்கள் மேல் இறக்கி வைக்கலாம் என்கிற சுயபச்சாதாப நிலையில் இருந்து வெளியேறுங்கள். ஊன்றுகோலுக்கு ஏங்காதீர்கள்.

பிறரால் நான் கைதூக்கிவிடப்பட வேண்டியவன் என்ற எண்ணமே ஒரு கெட்ட வார்த்தை.

பலரை உயர்த்தும் பலம் நமக்குள் இருக்கிறது என்று தயவுசெய்து உணருங்கள்.

சென்னையில் முன்னொரு முறை ஒரு குப்பத்தில் குடிசைகள் தீப்பற்றிப் பேரழிவு நேர்ந்தது.

அப்போது ஒரு பெண்மணி எரிகிற தன் வீட்டிலிருந்து பொருள்களை மீட்காமல் பூட்டியிருந்த அடுத்த வீட்டை உடைத்து நிறைய பொருள்களைக் காப்பாற்றினார்.

"உனக்கென்ன பைத்தியமா?'' என்று கேட்டபோது,

"அவர்கள் வீட்டில் அடுத்த வாரம் திருமணம். அதற்காக நிறைய விலை உயர்ந்த பொருள்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். என் பொருள் போனால் கொஞ்சம்தான் கஷ்டம்.

ஆனால் அவர்கள் குடிசை எரிந்தால் ஏகப்பட்ட கஷ்டம்... திருமணம்கூட நின்று போகும்.

அதனால்தான் அவற்றை மீட்டேன்'' என்றார்.

அவரது தீரம் வெற்றிக்கான விதை.....!!!

நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் நகரும் பெரியவர் ஒருவர் உடல் ஊனமுற்றவர்களின் பிரச்சினைகளைக் களைய தமிழ்நாட்டில் ஒரு சங்கம் நடத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா......???

திருமணமே செய்து கொள்ளாத வித்யாகர் ஆதரவற்ற அனைவரையும் ஆதரிக்கும் குடும்பஸ்தனாக "உதவும் கரங்கள்' நடத்துகிறார் தெரியுமல்லவா.

ஒரு குழந்தைகூடப் பெறாத தெரஸா எல்லோருக்குமே மதர் தெரஸா என்பது ஞாபகம் இருக்கிறதா.......???

சாய்வதற்குத் தோள் தேடுகிறவர்கள் சாய்ந்தே போகிறார்கள்.......!!!

இருக்கும்போதே இறந்து விடுகிறார்கள்.

கம்பீரமாக இமயமலை போல் இருப்பவர்கள் காலம் கடந்தும் வாழுகிறார்கள்.......!!!

இமயமலை போல இதய உறுதி கொள்ளுங்கள்.

சாய்வதற்கு ஒரு தோள் தேடாதீர்கள். வெற்றி நிச்சயம்......!!!

#வெற்றி நிச்சயம் என்ற நூலில் திரு.சுகிசிவம் அவர்கள்.

Sunday 23 June 2019

மன்னிப்பு

மன்னிப்பு என்பது:

நடந்த சம்பவத்தை மறப்பது என்பது அல்ல

எதுவும் நடக்காதது போல பழைய மாதிரி பழகுவது என்பது அல்ல.

அவர் செய்த தவறுக்கான தண்டனை அவருக்கு கிடைக்ககூடாது என்பது அல்ல

அவரை தண்டிக்க சக்தியின்றி எதுவும் செய்ய இயலாமல் ஆயுள் முழுக்க அவரை சபித்துக்கொண்டும், கருவிக்கொண்டும் இருப்பது என்பது அல்ல.

மன்னிப்பு என்பது:

வலிமையின் சின்னம்...வலியவன் தான் ஒருவரை தண்டிக்காமல் மன்னிக்க முடியும்.

"உன்னை தண்டிக்க என்னால் முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. உனக்கு தீங்கு நினைக்கவும் நான் விரும்பவில்லை" என விடுவதே மன்னிப்பு.

ஒருவரை உண்மையில் மன்னிக்க நீங்கள் வலுவானவராக இருக்கவேண்டும்.

அந்த மனவலிமை உங்களுக்கு உள்ளதா என்பதே கேள்வி.

நடந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லை எனில், அது ஆயுள் முழுக்க நம்மை உறுத்துகிறது எனில், ஒருவரை ஆயுள் முழுக்க நாம் சபிக்கிறோம் எனில் உண்மையில் நாம் தண்டனை கொடுத்துக்கொள்வது நமக்குத்தான்.

அவருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

"ஆத்திரம் என்பது சூடான நிலக்கரியை அடுத்தவர் மேல் வீசி எறிய நாம் நம் கையால் எடுப்பது போல...அவருக்கு பாதிப்பு ஏற்படுத்த நாம் நம்மை தண்டித்துக்கொள்வதுதான் அதன் பலன்" என்றார் புத்தர்.

மன்னிப்பு என்பது வெறும் தண்டனை தர மறுத்தல் மட்டுமல்ல. முழுக்க நம் மனதில் இருந்து இன்னொருவருக்கு கெடுதல் வரவேண்டும் எனும் நினைப்பையே அகற்றுவதுதான் உண்மையான மன்னிப்பு.

அந்த உணர்வு நம் மனதில் இருந்தால் இன்னொருவனுக்கு கெடுதல் வந்தால் நாம் மகிழ்ச்சி அடையமாட்டோம். வருத்தபடுவோம்.

இதன் மறுபக்கம் என்னவெனில் ஒருவன் நன்றாக இருந்தால் அதை கண்டு நாம் மனதில் வருத்தமடைவதும் ஆகும்.

இரண்டும் அவசியமில்லை.

வாழ்க்கை மிக சிறியது...சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.

நமக்கு நாமே தன்டனை கொடுத்துகொள்வது அவசியமில்லை....!

காபி

"பெரிய கம்பனிகளின் சி.ஈ..ஓக்களுடன் பேசவேண்டும் என்றால் காலை ஏழரை முதல் எட்டு மணிக்குள் அவர்கள் ஆபிசுக்கு போனை போடுவேன். கம்பனிகளுக்கு வரும் முதல் ஆள் சி.ஈ.ஓ தான். அவர்களின் செக்ரட்டரியே கூட லேட்டாக தான் வருவார். அதனால் போனை போட்டால் நேராக அவரிடமே பேசிவிடலாம்.

ஒரு முறை எனக்கு வேலை போய்விட்டது. ஒரு கம்பனி துவக்கலாம் என நினைத்தேன். பணம் இல்லை. காலையில் ஆறரை மணிக்கு ஒரு காபிகடைக்கு போனேன். பிளாஸ்க் நிறைய காபி, இன்னொரு பிளாஸ்கில் டீ வாங்கினேன். அதன்பின் வால் ஸ்ட்ரீட் போய் ஒவ்வொரு கம்பனியாக நுழைந்தேன்.

அதிகாலையில் முக்கியமான ஆட்கள் மட்டும் தான் கம்பனியில் இருப்பார்கள் என நினைத்தேன். போய் கம்பனியில் அந்நேரத்துக்கு யார் உட்கார்ந்து இருந்தாலும் "காப்பி வாங்கிட்டு வந்திருக்கேன். வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம். ஒரு நல்ல பிசினஸ் ஐடியா இருக்கு" என்றேன். ஆறரை மணிக்கு ஒருவன் காபியுடன் வந்து அழைத்தால் யார் மறுப்பார்கள்?

ஒரு பெரிய டிரேடிங் கம்பனியின் பார்டன்ருடன் பேசியதில் ஐடியா பிடித்துபோய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் தான் தெரிந்தது..அவரிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கிக்கொன்டு போய் சந்தித்திருந்தால் ஆறு மாதத்துக்கு அபாயிண்மெண்ட் கிடைத்திருக்காது என. முதலில் அவரது செக்ரட்டரியின் அபாயிண்மெண்டே எனக்கு கிடைத்திருக்காது. ஆறரை மணிக்கு காபியுடன் போனதால் அவரை வளைத்து பிடித்தேன். முதலில் அவர் "எனக்கு காபி பிடிக்காது, டீ தான் பிடிக்கும்" என்றார். "இந்த பிளாஸ்கில் டீ இருக்கு" என்றேன். "பால் சேர்த்த டீ தான் வேண்டும்" என்றார். க்ரீமரை பாக்கட்டில் இருந்து எடுத்து காட்டினேன்.."தயாராக தான் வந்திருக்கிறாய்" என சிரித்தபடி என்னுடன் உட்கார்ந்து பேசினார். பணம் கிடைத்தது.கம்பனி துவக்கினேன்..$20 பில்லியன் சம்பாதித்தேன்..இன்று நான் உலக கோடீஸ்வரர்களில் ஒருவன். காரணம் அதிகாலையில் காபி பிளாஸ்குடன் கம்பனி, கம்பனியாக ஏறி முன், பின் தெரியாதவர்களுடன் பேச நான் கூச்சபடாமல் இருந்ததுதான்"

-> தொழிலதிபர் ப்ளூம்பெர்க்

Tuesday 18 June 2019

வெற்றி

கவலைகளை வெற்றிகொள்வது எப்படி?

✓ 1. பழக்கம். கவலையும் ஒரு பழக்கம்தான். அது நீண்ட காலமாக நமக்குள் வளர்ந்து வருவது. உங்களால் ஒரு பழக்கத்தை உருவாக்க முடிந்தால், அதை உடைத்தெறியவும் முடியும்தானே. எனவே எதைப் பார்த்தாலும் கவலைப்படும் உங்கள் பழக்கத்தை உடனடியாக சுக்கு நூறாக உடைத்தெறியுங்கள்.

✓ 2. மூச்சுத் திணறடித்தல். கவலை என்பதன் அடிப்படைப் பொருள் இதுதான்: உங்கள் கழுத்தை நெரித்து மூச்சுத் திணறடிக்கும். கவலை உங்களது இயற்கையான திறனையும், சக்தியையும் அடியோடு வெட்டி வீழ்த்தி விடும். எனவே கவலை மிகுந்த எண்ணங்களால் உங்களை நீங்களே மூச்சுத் திணறடித்துக் கொள்ளாதீர்கள்.

✓ 3. முட்டாள்தனம். கவலை என்றால் என்ன? நமது மன வலிமையின் முட்டாள்தனமான குப்பை. உங்கள் கவலைகளின் 40 சதவிகிதம் கடந்த காலத்தைப் பற்றியது. 50 சதவிகிதம் எதிர்காலத்தோடு தொடர்புடையது. எஞ்சிய 10 சதவிகிதமோ நிகழ்கால சிக்கல்களை மையமிட்டது. நீங்கள் கவலைப்படும் 92 சதவிகிதம் கவலைகள் வாழ்க்கையில் ஒருபோதுமே நிகழ்வதில்லை. எஞ்சிய வெறும் எட்டு சதவிகித கவலைகளை மட்டுமே யதார்த்தத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

✓ 4. மறத்தல். கடந்த காலத் தவறுகளைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்த சிறந்த ஒரே வழி, அவற்றை மறந்து விடும் அளவுக்கு நீங்கள் திறமைசாலியாவதுதான். நடந்தது நடந்ததுதான், எனவே அதை மறந்து விடுங்கள்.

✓ 5. புறக்கணி. “எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதுதான் மேதமையின் உச்சம்.” இது பிரபல மனோதத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸின் புகழ்பெற்ற வரிகள். கவலைப்படுபவன், கவலை தரும் விஷயங்களைப் புறக்கணிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறான். கவலை குறைகிறது, பதற்றம் விலகுகிறது. “இதைக் கடந்து செல்வோம்” என்னும் புதிய மனப்பாங்கு உருவாகிறது. கவலையை விரட்டியடிக்க இது முக்கியமானது.

✓ 6. எதிர்காலம். எதிர்காலத்தின் இருண்ட புள்ளிகளைத் தேடுவதை நிறுத்தி விட்டு, ஒளி நிரம்பிய எதிர்காலத்தை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்புங்கள். ஏனென்றால் அங்கிருந்துதான் கடவுள் உங்களை கவனிக்கிறார். என்ன நிகழுமோ என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, ஆழமான நம்பிக்கையின் உதவியால் மிகச் சிறந்த நிகழ்வுகளை உருவாக்குங்கள்.

✓ 7. நிலை குலையா அமைதி. அமைதி குலையாத மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால், கவலை உங்களை நெருங்கவே நெருங்காது. எப்படிப்பட்ட நெருக்கடியிலும், பதட்டத்திலும் உங்களுக்குள் முழு நம்பிக்கையுடன் பின்வருமாறு சொல்லிக் கொள்ளுங்கள்: “கடவுள் என்னை அமைதியாகவும், சாந்தியாகவும் இருக்கச் செய்துள்ளார்.”

✓ 8. வெறுமை. எதுவுமே இல்லாத வகையில் மனதை வெற்றிடமாக வைக்க வேண்டும். எனவே வீண் கவலைகளால் உங்கள் மனதை நிரப்புவதை நிறுத்திவிட்டு, உடனடியாக அவற்றை உங்கள் மனதிலிருந்து வெளியேற்றும் வழியைப் பாருங்கள். இதைச் செயல்படுத்துவதற்கான முக்கிய வழிகளில் ஒன்று, “இப்போது என்னுடைய மனது கவலைகள், பதற்றங்கள், பயம், பாதுகாப்பின்மை போன்றவை எதுவுமே இல்லாமல் வெறுமையாக இருக்கிறது”என்று உங்களுக்குள்ளேயே உறுதியாகச் சொல்லுங்கள்.

✓ 9. நிரப்பு. மனதின் அமைப்பு, வெகு நேரத்துக்கு அதை வெறுமையாக இருக்க அனுமதிக்காது. எனவே நேர்மறை எண்ணங்களால் அதை உடனடியாக நிரப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால், கவலையைத் தூண்டும் எதிர்மறை எண்ணங்கள் அங்கே மறுபடியும் நுழைந்துவிடும். எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் மனதுக்குள் வலுக்கட்டாயமாக வலிமை மிகுந்த, ஆரோக்கியமான சிந்தனைகளை உட்செலுத்துங்கள். இவ்வாறு உரக்கச் சொல்லுங்கள்: “கடவுள் இப்போது என் மனதை துணிச்சல், வலிமை, அமைதி, நம்பிக்கை ஆகியவற்றால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்.”

✓ 10. இருப்பு. துணிச்சல் மிகுந்த வாழ்க்கைக்கான பிரபலமான நுணுக்கங்களில் ஒன்று, கடவுளின் இருப்பை எப்போதுமே தக்கவைத்துக் கொண்டிருப்பதாகும். இரவும் பகலும், ஒவ்வொரு நொடியும் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை உணரும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்வரும் இந்த உறுதிமொழியை தினந்தோறும் சொல்லுங்கள்: “கடவுள் ஒருபோதும் என்னை விட்டு விலகமாட்டார். நான் தனியாக இருப்பதே இல்லை. அவரது இருப்பு என்னை பாதுகாக்கிறது.”

நன்றி

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

வேல் மாறல்

வேல்மாறல் மகா மந்திரம்:-

இந்த மகா மந்திரத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை.  இந்த பதிவை பத்திரபடித்தி வைத்து கொள்ளவும். தினமும் இருமுறை காலை  மாலை பகத்தியுடன் பாராயணம் செய்யவும்.

வேலும் மயிலும் சேவலும் துணை

1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.

2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்...

4.  தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள் 
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்...

6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்...

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்...

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். - திருத்தணியில்...

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்...

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

13.  பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்...

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்...

15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்...

16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்...

18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் - திருத்தணியில்...

20.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்...

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் - திருத்தணியில்...

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் - திருத்தணியில்...

25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் - திருத்தணியில்...

26.  தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் - திருத்தணியில்...

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் 
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்...

28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்...

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். - திருத்தணியில்...

35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்...

38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்...

39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் 
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்..

41.  தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

42.  சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்..

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..

45.  சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்..

49.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்..

51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..

55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்..

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் 
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்...

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்..

60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்..

61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்..

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். - திருத்தணியில்....