Tuesday 11 December 2018

அங்கீகாரம்

*சிந்தனைக்கு! !!!!*

*அங்கீகாரம்*

*கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்*

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு.
குழந்தையோட அம்மா, பள்ளிக்கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு...

சரி சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலுன்னு சொல்லி அத்தோட நிறுத்திகிச்சு.
அம்மா மறுபடியும் சொல்லச் சொன்னாங்க... அப்பவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாவுக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சரியா சொல்லத் தெரியலைன்னு நினைச்சுகிட்டு,
அடுத்த நாள்
பள்ளிக்கூடத்துக்குப் போனாங்க..

அங்க ஆசிரியர் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது..
நீங்க சொல்லிக் கொடுக்கலையான்னு கேட்டாங்க..

அதுக்கு அவர் சொன்னார்
இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தையக் கூப்பிட்டார்...
குழந்தை கிட்ட சொல்லச் சொன்னார்...

குழந்தை ஒன்னு சொல்லுச்சு,
அப்போ ஆசிரியர் ம்ம்..
அப்படின்னார்.

குழந்தை ரெண்டு சொல்லுச்சு,
ஆசிரியர் ம்ம் அப்படின்னார்.

குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்..

குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு...அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு...

அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்துக்கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கணும்...
ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்...
இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும்.
*மனிதர்களுக்குத் தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம்,* அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம்
தேவைப்படுகிற போது, *குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கும் நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா* என்பது மிக முக்கியமானது...

எனவே *கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்..!*

Monday 10 December 2018

நாம் நாமாக இருப்போம்

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்

நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன அவ்வளவுதான்.

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளுகிறோம்

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  நம்மால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  நம்மால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  நம்மால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  நம்மால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  நம்மால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருப்போம்.

*உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

*எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*

நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க  வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.

நமக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.

*நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்*.....

Friday 7 December 2018

உற்சாகம்


.............................................

*''உற்சாகம் என்னும் ஊக்கி.''.*
.............................................

வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய கருத்து புலப்படும்.

அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ''ஊக்கியாக'' இருக்கும்.

அந்த ஊக்கிதான் ''உற்சாகம்''. உற்சாகமே அவர்களது உயிர்.

சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.

வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து,பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம்.

இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும்அமைத்துக் கொள்ளலாம்

உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.

ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!

மனிதர்களுக்கு எல்லா வயதிலும் அங்கீகாரமும் பாராட்டுக்களும்தான் உற்சாகத்தை தரக்கூடியதாகவே இருக்கிறது.

அந்த உற்சாகம்தான் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை யில் சாதித்து வெற்றி அடைய வேண்டும் என்கிற
உத் வேகத்தைத் தருகிறது.

மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி..,

இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி,

"ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.

"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.

"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப் போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்க வில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.

ஆம்.,நண்பர்களே..,

'உற்சாகத்தை நினையுங்கள்,

உற்சாகம் பற்றிப் பேசுங்கள்,

*உற்சாகமாகச் செயல்படுங்கள்'.*

*நீங்கள் உற்சாக மனிதராகவே ஆகிவிடுவீர்கள்.

Thursday 6 December 2018

எனது எண்ணங்கள்

( காலை எழுந்தவுடன் மனதில் கீழ்கண்ட வரிகளை சொல்லுங்கள்..நீங்கள் விரும்பியதை பிரபஞ்சம் உங்களுக்கு வழங்கும்)

எனது தேவைகளை நிறைவேற்ற கூடிய பணம் என்னிடம் நிறைய இருக்கிறது.

நான் தினமும் தியானம் செய்கிறேன்

எனது எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை

என் நோய் எதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது

நான் எப்பொழுதும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்

பிரபஞ்சம் என் மீது அளவற்ற வளங்களை பொழிகிறது

என் வாழ்க்கை மிக அழகானது

எனது சக்தியின் அளவு எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்கிறது

எனது எண்ணம்,வாக்கு & செயல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து இருக்கின்றன

நான் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்கிறேன்

என்னால் வாழ்வில்எதையும் சுலபமாக எதிர்கொள்ள முடியும்

நான் எப்பொழுதும் நல்ல விஷயங்களையே
நாடுகிறேன்

என் இலட்சியங்கள் நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றிசொல்கிறேன்

நல்லவர்களை மட்டுமே என்
வாழ்வில் ஈர்க்கிறேன்

நான் வளமையான உணர்வுடன் வாழ்கிறேன்

என்னைப் பற்றி சிறப்பாக உணர்கிறேன்

என்னை நான் மதிக்கிறேன்

எனக்குள் அமைதியை உணர்கிறேன்

என் சமயோஜிதம் பிரமாதமாக உள்ளது

பணம் ஒரு சக்தி நான் அதை ஈர்க்கிறேன்

வாழ்வில் எனது பங்கை புரிந்து செயல்படுகிறேன்

நான் மிகவும் சக்தி
    வாய்ந்த மனிதன்

என் எண்ணங்கள் எப்பொழுதும் நான்*ன விரும்பிய பாதையிலேயே
      செல்கின்றன

அழகிய நிறங்களும்நல்ல சக்தியும் என்ஆராவை நிறைக்கின்றன

என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்

என் இலட்சியங்கள் சுலபமாக நிறைவேறுகின்றன

நான்.நிகழ்காலத்தில் வாழ்கிறேன்

வாழ்வில் எனக்கு கிடைத்த விஷயங்களுக்காக நான் நன்றி சொல்கிறேன்

என் மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது

நான் முழுமையான       ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்

நான் பணத்தை ஒரு காந்தம் போல வசீகரிக்கிறேன்

நான் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறேன்

நான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்

எனது    எண்ணங்களில் *சுதந்திரத்தை
  உணர்கிறேன்

என்னை நான்
நேசிக்கிறேன்

எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது

எனக்குள் ஆனந்தமும் நிம்மதியும் உணர்கிறேன்

நான் சாதிக்கப் பிறந்தவன்

என் மனம் தெளிவாக இருக்கிறது

என் வாழ்வின்
ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்

வாழ்வில் நான் தாண்டி வரும் இடர்பாடுகள் எனக்கு மேலும் சக்தி அளிக்கின்றன

அன்பை பெறவும் தரவும் நான் தயாராக இருக்கிறேன்

எனது வாழ்வை சிறப்பாக்க இந்த பிரபஞ்சமே செயல்படுகிறது

என் உடலும் மனமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன

என் மனம் அமைதியாக இருக்கும் பொழுது இலட்சியங்களை நிறைவேற்றுவது சுலபமாக இருக்கிறது

தெய்வீக சக்தி எப்பொழுதும் என்னை சூழ்ந்து  பாதுகாப்பு அளிக்கிறது

என் ஆராவில் உள்ள நல்ல சக்தி அனைவரையும் சாந்தப்படுத்தி நிம்மதி அளிக்கிறது

இந்த நொடி என்னுடையது. அதை நான் மதிப்புள்ளதாக மாற்றுகிறேன்

என் உடல் கச்சிதமாகவும் மனம் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன

என் ஆழ்மனதின் சக்தியால் வாழ்வில் அற்புதங்களை  உருவாக்குகிறேன்

நான் எங்கு சென்றாலும் நல்ல சக்தியை பரவச்செய்கிறேன்

எனக்கு எது நல்லதோ அதையே பிரபஞ்சம் தருகிறது

என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருக்காகவும் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன்

என் உடலில் பஞ்ச பூதங்களும் சம நிலையில் இருக்கின்றன

என் வாழ்வில் சௌபாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன.

நன்றி நன்றி நன்றி

எண்ணம்

*அவரவர் பார்வையில்.... எண்ணங்கள்.....*

(ஒரு சுவாரஸ்ய கதை)

ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.

கடவுள் அவன் தவத்தை மெச்சி ,
‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.

‘மற்றவர்களின் மனதில்...
என்னைப்பற்றி.. என்ன நினைக்கிறார்கள்....
என்று..
உணர்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.

கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.

சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ....

,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.

‘ஏன்?’ என்றார் கடவுள்.

‘அனைவருமே.....
என்னை பொய் சொல்கிறவன்,.... பொறாமை பிடித்தவன்,....
அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி....நயவஞ்சகன்.......

என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’.. சாமீ....  என்றான்.

‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில்.. கண்களை மூடிப் படுத்துக் கொள்....
என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.

அப்படியே செய்தான் பக்தன்.

அப்போது ஒரு குடிகாரன் வந்தான்.....

,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.

பிறகு ஒரு திருடன் வந்தான்......

‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு நோயாளி வந்தான்.....

‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.

ஒரு துறவி வந்தார்,....

‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.

சிறிது நேரம் கழிந்தது....
கடவுள் பக்தனிடம் வந்தார்.

‘பார்த்தாயா....????

உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள்...

இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே....!!!

ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும்....
உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல்...

வெற்றி உனக்குத்தான்’ என்றார்.
பக்தன் தெளிவடைந்தான்....

நமது...
*வாழ்க்கையில்... தொழிலில்..... இல்லத்தில்..... நட்பில்...... பாசத்தில்.... ஏன்.. வாகனப்பயணத்தில்...*

மற்றவர்கள்....
என்ன...? ? எப்படி..???. என...
நமை நினைப்பார்களோ...!!!!!!????,,

என்று எண்ணிடாமல்..
*கடிவாளம் போட்டு... வண்டியிழுக்கும்.... குதிரையைப்போல...*

*நீ...அடையும் இலக்கை..!!!!     நோக்கி பயணித்திடு....*

Wednesday 5 December 2018

சந்தோஷம்

சந்தோஷம்

வாழ்வை முழுமையாக மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி ஆடி பாடி வாழு.அப்போது இந்த கணமே,இந்த முழு பிரபஞ்சமும் தெய்வீகமானதாகிவிடும்.

உன் ஆடலில், பாடலில், சந்தோஷத்தில், பரவசத்தில் அது தெய்வீகமானதாகி விடும்.

உன் ஆனந்தத்தில் நீ தெய்வீகத்தின் எல்லையை சென்றடைவாய்.

நீ ஒரு பாடலை பாடும்போது,நீ அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தலில் உயிர்ப்புடன் இருக்கிறாய்.

நினைவில் கொள்.

நீ மகிழ்ச்சியடைந்தால் தவிர உன்னால் அன்பு செய்ய முடியாது.நான் சத்தியமாக சொல்கிறேன்.உன்னுள் சந்தோஷமும் கொண்டாட்டமும் நிரம்பி இருக்க முடியும்.
ஆழ்ந்த மௌனத்தில் சந்தோஷத்தில் நிறைவில் லயம் தானாகவே வரும்

நீ என்ன செய்தாலும் அதை சந்தோஷமாக செய்யும்போது,மகிழ்ச்சி தானாகவே நிகழும், மலரும்.
சந்தோஷம் முதலில் வரும்.பின் கொண்டாட்டம் அதை தொடர்ந்து வரும்.

ஓஷோ